“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” நூல் வெளியீடு

‘தமிழ் மிரர்’ பத்திரிகையின்  ஆசிரியர் ப.மதனவாசனின் (ஏ.பி.மதன்) ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று 17.03.2017 வெள்ளிக்கிழமை கொழும்பு – 10, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், மாலை 2 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூலின் முதல் பிரதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெளியிட்டு வைத்தார். ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் தலைமையிலும் டெக்கான் குரோனிக்கலின் (இந்தியா) நிறைவேற்று ஆசிரியர் பஹ்வான் சிங்கின் இணைத் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக. மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

*

*

Top