காரைநகரில் ‘வனவளம்’ நூல் வெளியீடு

Barack Obama

திருச்செல்வம் தவரத்தினம் எழுதிய ‘வனவளம்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25.03.2017 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு காரைநகர், கோவளம் புகலி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத் தோப்பில் நடைபெறவுள்ளது.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச செயலர் ஈ.தயாரூபனும் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வித்திணைக்கள, தொழில் நுட்பத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் து.லெனின் அறிவழகனும் கெளரவ விருந்தினர்களாக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் ப.செல்வகுமார், காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன், பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஆ.யோகலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வொழுங்கு வரிசையில் விருந்தினர் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், அரங்கம் திறத்தல், வரவேற்புரையினைத் தொடர்ந்து ஆசியுரையினை சிவஸ்ரீ, சோமசுந்தரக்குருக்கள் நிகழ்த்துவார். தலைமையுரையினை அடுத்து நூல் வெளியீட்டுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தாவரவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரங்கநாதன் கபிலன் ஆற்றுவார். விருந்தினர் உரைகளைத் தொடர்ந்து நூலசிரியரின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெறும்.

Related posts

*

*

Top