மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார்.

எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள்இ சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர். பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர்.

இவர் 1931 செப்., 22ம் தேதி தெலுங்கானாவின் செகந்திராபத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் தியாகராஜன். தந்தையின் மறைவுக்குப் பின் 1952ல் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ஜெமினி ஸ்டுடியோவில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதே எழுதத் தொடங்கினார். இருப்பினும் 1966ல் தான் முழுமையான எழுத்தாளராக ‘அசோகமித்திரன்’ என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தார். 1980களில் பல்வேறு கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதையே முழுமையான பணியாக இந்தியா முழுவதும் மேற்கொண்டார்.

1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். ‘அசோகமித்திரன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். இவரது கதை எழுதும் பாணி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சி வசப்பட்ட நடையைத் தவிர்த்து சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதும் வழக்கம் கொண்டவர். இதனால் வாசகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருந்தது. இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது செகந்திராபாத்தை கதைக்களமாக கொண்டிருக்கும்.

200 சிறுகதைகள்

‘கணையாழி’ என்ற இதழில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். தவிர 8 நாவல்கள், நுாற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என எழுத்துலகில் தனி முத்திரை படைத்தவர்.

போர்டீன் இயர்ஸ் வித் பாஸ்’, ‘தி கோஸ்ட் ஆப் மீனம்பாக்கம்’, ‘ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்’ உள்ளிட்ட இவரது ஆங்கில நுால்கள் மிகவும் பிரபலம். ஆங்கில நாளிதழ்களிலும் எழுதியுள்ளார். ‘நாடகத்தின் முடிவு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘பிரயாணம்’, ‘மானசரோவர்’  உள்ளிட்டவை இவரது படைப்புகளில் முக்கியமானவை.

விருதுகள்

1977 மற்றும் 1984ல் தமிழக அரசின் ‘இலக்கிய சிந்தனை’ விருதுஇ 1992ல் ‘லில்லி நினைவு’ பரிசுஇ 1996ல் அக்சரா விருதுஇ 1996ல் சாகித்ய அகாடமி விருதுஇ 2007ல் எம்.ஜி.ஆர்.இ விருதுஇ 2012ல் என்.டி.ஆர் தேசிய நுாலக விருதுஇ 2013ல் ‘க.நா.சு’ விருதுஇ 2013ல் பாரதிய பாஷா பரிசத் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர்.

Related posts

*

*

Top