அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோய்

– Dr.எம் வெங்கடேஷ்

இப்போதைய இளைய தலைமுறையினர், இணைய தலைமுறையினராக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் தருவதில்லை. பொருளீட்டுவதற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதன் பின்விளைவாக எந்த நேரத்திலும் உணவு உண்பது, சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் துரித வகை உணவுகள் உண்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்வது, புகைபிடிப்பது, மது அருந்துவது, மாசடைந்த புறச்சூழலில் தொடர்ந்து இயங்குவது போன்ற காரணங்களால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

மலக்குடல் புற்றுநோயால் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். 6 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் இதனால் ஏற்படுகின்றன. தெற்காசியாவில் இளம் வயதினர் மத்தியில் இந்நோய் அதிகரித்து வருவதாகவும்இ அடுத்த 15 ஆண்டுகளில் இந்நோய் பாதிப்பு பரவலாக அதிகரித்து இருக்கும் என்றும் நிபுணர்கள் அவதானித்துள்ளனர்.

அதே சமயத்தில் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் குறித்து தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. ஆசனவாயில் ரத்தக்கசிவு, மலத்தில் ரத்தம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, உடல் எடை இழப்பு போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் 4 வாரங்கள் நீடிக்குமானால், உடனடியாக மருத்துவ நிபுணர்களைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை செய்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளவேண்டும்.

Related posts

*

*

Top