டொம்கற் வண்டின் தாக்கமும் தவிர்க்கும் வழிகளும்

– பேராசிரியா் கு.மிகுந்தன்

கிளிநொச்சியின் அறிவியல் நகர்ப்பகுதிகளில் டொம்கற் வண்டு (Tomcat Beetle)  அல்லதுறோவ் வண்டு(Rove Beetle) இனதுதாக்கம் உள்ளதாக அறியக் கிடைத்திருக்கின்றது. இது குறிப்பிட்டபகுதியில் அதிலும் கிளிநொச்சியில் அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த பூச்சியின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் மருத்துவபீட மாணவர்களின் விடுதியில் இவ்வகை பூச்சிகளின் தாக்கம் காணப்பட்டதாகவும் இப்பூச்சியின் தாக்கம் எப்பகுதியிலும் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிய முடிகின்றது. மனிதர்களின் தோலில் அழற்சியை ஏற்படுத்தும் வகையில் இப்பூச்சியின் தாக்கம் காணப்படுவது அவதானிக்கப் பட்டுள்ளது. இந்ததாக்கத்திலிருந்து எம்மினிய உறவுகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கிலும் பூச்சியின் தாக்கத்திலிருந்து தம்மை விலக்கிக்கொள்ளும் நோக்கிலும் இப்பூச்சி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.  இப்பூச்சிகள் பரவுவதற்கான சூழ்நிலை காணப்படுவது தாக்கத்தின் தீவிரத்தை உணர்த்தி நிற்கின்றது.

Prof.G.Mikunthanசாதாரணமாக டொம்கற் பூச்சிகள் வண்டுகள் (Beetles); வகையைச் சார்ந்தவை. கொலியோப்தீறா (Order – Coleoptera) வருணத்தைச் சார்ந்தவை. இதi Paederusfuscipes என்னும் விலங்கியல் பெயர்கொண்டு அழைப்பர். கருமை நிறமான இவ்வண்டின் நெஞ்சறைப்பகுதியும் வயிற்றறையின் முன்பகுதியும் சிவப்பு நிறமாக காணப்படுகின்றன. தேவையேற்படின் வயிற்றறைப்பகுதியின் நுனிப்பகுதியை மேல்உயர்த்தி ஒரு எறுப்பின் அமைப்பாகவும் இவ்வண்டு தன்னை இனங்காட்டிக்கொள்ளும். இப்பூச்சிகளின் உடலில் அதிகமான மயிர்கள் காணப்படுகின்றன. சாதாரணமான பூச்சியாக வெளித்தோற்றம் இருப்பினு;ம் இவ்வண்டு மனிதனின் தோலில் தொடுகை ஏற்பட்டவுடன் ஒவ்வாத்தன்மை காரணமாக அழற்சியை உருவாக்கக்கூடியது. உடலில் அதிகமான மயிர்களைக் கொண்டிருப்பதாலும் வண்டு எமது தோலில் பட்டவுடன் இதனது உடலிலிருந்து மயிர்களூடாக சுரக்கப்படும் ஒருவிதமான பேடெரின் (Paederin)  நச்சுத்திரவம் எமதுதோலில் ஒவ்வாத்தன்மையைத் தோற்றுவிப்பதுடன் அழற்சியையும் தோற்றுவிக்கக்கூடியன.

டொம்கற் வண்டுகள் அளவில் ஏறக்குறைய ஒரு சென்ரி மீற்றருக்கு குறைவானதாகவே காணப்படுகின்றன. இவ்வண்டுகள் மனிதனைக் கடிக்கவோ அல்லது தேனீக்கள் போன்று குத்தவோ முடியாதன. ஆனால் இரவுப் பூச்சிகளாக (Nocturnal) இவை இருப்பதனால் இரவிலேயே அதிகமான நடமாட்டத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக ஈரலிப்பு அதிகமாக உள்ள கழிவுகள் சேரும் இடங்களில் இவை பெருகுகின்றன. நெல்வயல்களிலும் பெருக்கமடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது மழையின்றி நெல்வயல்கள் காய்ந்திருப்பதனால் அநேகமாக நீர்தேங்கியிருக்கும் குட்டைகள் அல்லது குளங்களை அண்மித்த பகுதிகளில் இவை இனம்பெருக்க  சாத்தியக்கூறுகள் அதிகமே. அதிலும் இவை வாழுகின்ற பகுதிகள் மனிதர்களின் நடவடிக்கைகளால் கலைக்கப்படும்போது அவை வெளிச்சத்தை நோக்கி படையெடுக்கின்றன. வழக்கமாகவே இரவுப்பூச்சிகள் வெளிச்சத்தினை நோக்கிவருவது இயல்பு. அந்த வகையில் இவை வீடுகள் மற்றும் விடுதிகளிலுள்ள வெளிச்சத்தை நோக்கி கவரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்  அதிகமானதாகும்.

பொதுவாகவேடொம்கற் வண்டுகள் இச்சூழல் தொகுதியில் இரை கௌவிகளாக காணப்படுகின்றன. பயிர்கள் மற்றும் தாவரங்களிலுள்ள பூச்சிகளை இரையாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதனால் இவை நன்மை பயக்கும் பூச்சிகள் வகையில் அடங்கினாலும் மனிதனின் உடலில் பட்டவுடன் இவ்வண்டின் உடலிலுள்ள மயிர்களிலிருந்து வெளிப்படும் சுரப்பு நச்சுத்தன்மையானதாக இருப்பதனால் மனிதனின் தோலில் அழற்சியை ஏற்படுத்தி விடுகின்றது. ஒவ்வாத்தன்மை (Allergic) அதிகம் உள்ளவர்களுக்கு இவ்வண்டின் தாக்கம் அதிகமாக இருப்பதாகஅறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வண்டின் தாக்கம் உணரப்பட்டால் பின்வரும் விடங்களில் கவனஞ்செலுத்துதல் வண்டின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

1. இரவில் வீடுகளில் அல்லது அறைகளில் வெளிச்சத்தைப் போடமுன்னர் அறைக்கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளை மூடிவிடல் நல்லது. வழக்கமாக நுளம்பின் தாக்கத்திலிருந்து நாம் எம்மைப் பாதுகாக்க மாலை நேரங்களில் நுளம்பின் தாக்கம் அதிகமாக நேரத்தில் இதனைசெய்வது எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

2. இவ்வண்டு நேரடியாக தோலில் படும்போது இவ்வகையான நச்சுச்சுரப்பின் காரணமாக ஒவ்வாத்தன்மை ஏற்படுகின்றது. வீடுகளில் அல்லது விடுதிகளில் மின்குமிழ் மூலம் வெளிச்சம் அதிகமாகபெறும் இடத்திலிருப்பவர்கள் வெற்றுடம்புடன் இருக்காது உடலை மறைக்க முழுக்கைசேட் மற்றும் ஆடைகள் அணிந்திருப்பது நல்லது. குறிப்பாக வீடுகளில் குழந்தைகளுக்கு ஆடைகளை அணிவித்திருப்பது பூச்சியின் தாக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள உதவும். ஆனால் தற்போதய காற்று அதிகம் வீசாத உஸ்ணமாக சூழ்நிலையில் இவ்வாறான உடைகளை அணிந்திருப்பதற்கு பலரும் விருப்பப்பட மாட்டார்கள். ஆயினும் இவ்வண்டின் தாக்கம் உணரப்பட்ட இடங்களில் இதனை கவனத்திற் கொள்வது சிறந்தது.

3.வீட்டுக்கு அல்லது விடுதிகளுக்கு வெளியே அதிகம் வெளிச்சத்துடனான பூச்சிகளைக் கவர்ந்தழிக்கும் வெளிச்சப்பொறியினை அமைத்து அதன்மூலம் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இவ்வெளிச்சப் பொறிகளை அமைப்பதன் மூலம் இப்பூச்சியின் இருப்பையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.

4. இவ்வண்டு பெருகும் இடங்களை  இனங்கண்டு அவற்றை அழிப்பது நல்லது ஆனால் இது இலகுவான காரியமல்ல. அநேகமான ஈரலிப்பு அதிகமுள்ள இலைகுழைகள் அதிகம் உள்ள இடங்களிலும், கழிவுகள் சேரும் இடங்களிலும் இன்னும் நெல்வயல்களிலும் இது பெருகுகின்ற காரணத்தால் இவற்றின் வாழிடங்களை அழிப்பதென்பது இலகுவான காரியமல்ல.

5. பூச்சிநாசினி விசிறுவதாயின் தொடுகைரக பூச்சி நாசினியைத் தெரிவு செய்யலாம். ஆனால் பூச்சி நாசினி நேரடியாக வண்டின் உடலில்படாது விடின் பூச்சிநாசினி தெளிப்பதால் எந்தவித பிரயோசனமும் இருக்காது. வெளிச்சத்தை நோக்கி கவரப்பட்ட வண்டினை அழிப்பதற்காக தேவைப்படின் பூச்சிநாசினி தெளிப்பதை கவனத்திற் கொள்ளலாம்.

6. வண்டு உடலில் பட்டு ஒவ்வாத்தன்மை ஏற்படுமாயின் தோலில் அரிப்பு ஏற்படும். அப்போது தோற்பகுதியை விரல்களால் சுரண்டக்கூடாது. அவ்வாறு செய்யும் போது தோலில் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு. வண்டுபட்ட பகுதியில் அரிப்பு ஏற்படும் போது சவர்க்கார தண்ணீரால் அந்த இடத்தைக் கழுவிவிடல் வேண்டும். அதிகம் அரிப்பு காணப்பட்டால் வைத்தியரை நாடுவது நல்லது.

7. வண்டின் பிரச்சனைக்குஎம்மைநாம் தயார்ப்படுத்திக்கொண்டால் இப்பிரச்சனைவராதுதவிர்த்துக்கொள்ளலாம்.

Related posts

*

*

Top