‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

நானிலம் இணையம் மற்றும் கலர் மீடியா பாக்டரி, ஓம்செட் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் ஊடக அனுசரணையில் அசீமின் இயக்கத்தில் உருவான தந்தை – மகள் பாசத்தை சொல்லும் ‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் கடந்த 20.04.2017ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ஒரு மகளின் முதல் காதல் எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், எவ்வாறு நல்ல பழக்கவழக்கங்களைப் புகட்ட வேண்டும் போன்ற கருத்துகளையும் கிழக்கு சமூகத்தின் பிரச்சனைகளையும் அதனால் ஒரு பெண் குழந்தை அடையும் துயரங்களையும் கூற விளைகிறது இக் குறுந்திரைப்படம்.

இக்குறும்படத்தின் திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தினை அசீமும் ஒளித்தொகுப்பை நசீமும், தயாரிப்பு நிர்வாகத்தை பனாசும் மேற்கொள்கிகின்றனர். கிழக்கு மாகாண புற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி திரட்டும் முயற்சியாக இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top