மிருதங்க செயன்முறை நூல் வெளியீடு

யாழ். பல்கலைக்கழக மிருதங்க விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் எழுதிய “முப்பத்தைந்து தாளங்களில் தனியாவர்த்தனம்”  என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.30 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றக் கலாமண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி க. சுதாகரும் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு சுவாமி விபுலாந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இறைவணக்கத்தை நயினை ப.சிவமைந்தன் இசைத்தார். யாழ். பல்கலைக்கழக இசைத்துறை உதவி விரிவுரையாளர் க.வர்ஜிகன் வரவேற்புரையையும் இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் சுகன்யா அரவிந்தன் நூலுக்கான வெளியீட்டுரையையும் ஆற்றினர்.

நூலின் முதற்பிரதியை நல்லை க. கண்ணதாஸின் குரு தண்ணுமை வேந்தன் மா.சிதம்பரநாதன் பெற்றுக்கொண்டார்.

நூலை அழகுற அச்சிட்ட மதி கலர்ஸ் பதிப்பக உரிமையாளர் சதீஸ் மற்றும் பக்க வடிவமைப்பாளர் கௌரி ஆகியோருக்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

நிகழ்வில் கௌரவப் பிரதிகளை மூத்த கலைஞர்கள் பெற்றுக்கொண்டனர். சங்கீத பூஷணம் சு.கணபதிப்பிள்ளை, ஓய்வுநிலை விரிவுரையாளர் தர்மபூபதி சிதம்பரநாதன், கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன், கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார், கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரா, யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கிருபாசக்தி கருணா, யாழ். கல்வி வலய நடன பாட ஆசிரிய ஆலோசகர் அகல்யா இராஜபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் சிறப்பு இசைஅரங்கங்கள் இடம்பெற்றன. தொடக்க நிகழ்வாக இடம்பெற்ற லயப்பிரம்மம் என்ற இசை அரங்கில் பாட்டு – அ.அமிர்தசிந்துஜன், வயலின் – கா.குகபரன், மிருதங்கம் – நா.சிவசுந்தரசர்மா, கடம் – நா. மாதவன், முகர்சிங் – சி.செந்தூரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவில் இடம்பெற்ற இசைஅரங்கில் பாட்டு – அருணந்தி அரூரன், வயலின் – கா.குகபரன், மிருதங்கம் – திருமலை ப.திவ்யரூப சர்மா, கெஞ்சிரா – நா.சுந்தரேஸ்வர சர்மா, கடம் – ஞா.வசந், முகர்சிங் – ந.சதீஷ்குமார். ஆகியோர் பங்கேற்றனர்.
.
நல்லை க. கண்ணதாஸ் எழுதிய முப்பத்தைந்து தாளங்களில் தனியாவர்த்தனம் என்ற நூல் செயன்முறை சார்ந்த முழுவியல் சார்ந்த நூலாகும். இதன் விலை ஆயிரம் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

2 5 18424019_10156099170010744_2662621938122649517_n

Related posts

*

*

Top