களிமண் சிற்பக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியினால் கடந்த ஓராண்டு காலமாக கலைத்தூது கலாமுற்றம் – ஓவியக்கூடத்தில் நடத்தப்பட்டு வந்த களிமண் சிற்பச் சான்றிதழ் கற்கைநெறியின் நிறைவு நிகழ்வுகள் எதிர்வரும் 27ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

27ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு களிமண் சிற்பக் கற்றைநெறியை நிறைவு செய்யும் மாணவர்களின் சிற்பக் கண்காட்சி இல 15, றக்கா வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஓவியக்கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்படும். இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி. கருணாகரன் சுதாகர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைப்பார்.

தொடர்ந்து 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு களிமண் சிற்பக் கற்கைநெறியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் கலை நிகழ்வுகளும் இல. 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் இடம்பெறும்.

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருள்திரு. யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.இந்தியத் துணைத்தூதர் ஸ்ரீமான். ஆ.நடராஜனும் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான திரு.பொ.பாலசுந்தரம்பிள்ளையும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

*

*

Top