இருளும் ஒளியும்

– அருணா சுப்ரமணியன் 
அறையின் மூலையில்
சன்னமான ஒளியைஇதமாய் அளித்த
விளக்கின் அடியில்
அமர்ந்து புத்தகம்
ஒன்றை வாசித்தேன்
இருளை பற்றியது
பக்கவாட்டில் இருந்து
விளக்கும் வாசித்தது
இருளே முழுமையானது
இருளே ஆளுமையானது
இருளைக் கண்டு தான்
அனைவரும் அஞ்சுவர்
இருளில்லையேல்
ஒளிக்கென்ன தேவை
என்ற வரிகளை வாசித்த
நேரத்தில் விளக்கணைந்தது
ஒளி ஓடி ஒளிந்து கொண்டது.
இருளில் இருளை பற்றி
வாசிக்க முடியாது
ஒளியின்றி இருளையும்
அறிய முடியாது !

Related posts

*

*

Top