களிமண் சிற்ப பயிற்சியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

திருமறைக் கலாமன்றத்தின் கலைதுாது ஓவியக் கலையகத்தினால் நடத்தப்பட்ட ஒருவருட களிமண் சிற்ப பயிற்சியின் நிறைவு வைபவமும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் கடந்த 28.05.2017 அன்று யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்பாணத்துக்கான இந்திய துணைத்துாதுவர் நடராஜனும்  சிறப்பு விருந்தினராக முந்நாள் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளையும்  கலந்து சிறப்பித்தனர்.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட  இப்பயிற்சியை கொழும்பு ‘கட்புல ஆற்றுகைக் கலைகள்’ பல்கலைக்கழக, பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சரத்சந்திர ஜீவா வழங்கினார். இந்நிகழ்வில் அவரும் அவரது உதவியாளர்களும் கெளரவிக்கப்பட்டனர். இதில் பயிற்சிபெற்று சித்தியெய்திய 19 மாணவர்களுக்கான தகமைச்சான்றிதழ்களும் பேராசிரியர் சரத்சந்திர ஜீவா அவர்களினால் வழங்கப்பட்டது.

இம்மாணவர்களின் 35க்கு மேற்பட்ட சிற்பங்கள் கலைத்துாது கலாமுற்றத்தில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இ்க்கண்காட்சி 27.05.2017 அன்று யாழ்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி க.சுதாகரால்  திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கௌரவிப்பு நிகழ்வில் நடன அளிக்கை மற்றும் ‘ஒமேகா’ வார்த்தைகளற்ற நாடகத்தின் சில காட்சிகள் என்பனவும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

15 6 2

Related posts

*

*

Top