மலர்ப்படுக்கை

– அருணா சுப்ரமணியன் 

மெத்தை வாங்கும் முன்னரே
விரிப்பு ஒன்றை வாங்கினான்
அதில் வரைந்திருந்த 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மலர்களின் அழகில் மயங்கி..
தினமும் சில நேரம் அதனை
பார்த்து ரசிப்பது
வாடிக்கையானது
அப்போதெல்லாம் அந்த
மெத்தை விரிப்பில்
தூங்குவது போல
கனவுகள் காண்பான்…
அந்த நாளும் வந்தது
மெத்தை வாங்கிவந்தான்
அழகிய விரிப்பில்
துயிலும் தருணங்களை
எதிர்நோக்கியவன்
படுத்த மாத்திரத்தில்
துள்ளி எழுந்தான்
மலர்களில் மறைந்திருந்த
முட்கள் குத்தியதால்..
அவன் காயங்களைக் கண்டவர்
விரிப்பை மாற்றிடு என்றனர்..
ஆசையாய் வாங்கிவந்த
விரிப்பை விட மனமில்லாது
தினமும் அதிலேயே
படுத்து எழுகிறான்
காலப்போக்கில்
முட்களின் முனை
மழுங்கிடும் என்றும் …
காலைக்கதிரில்
காயங்களுக்கு
மருந்திட்டு கொண்டும் …

Related posts

*

*

Top