‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா

வன்னி.தே.பிரமிளா(லதா) எழுதிய ‘என் மனத் துளிகள்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18.06.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வவுனியா, குருமன்காடு பிறின்சஸ் ரோஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக ப.உதயராசா, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் கெளரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் செ.சந்திரகுமார், கலைஞர் மாணிக்கம் ஜெகன், செட்டிக்குளம் பிரதேச வைத்திய அதிகாரி எஸ்.சுதர்சன், செட்டிக்குளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜேசுதாசன், மதபோதகர் ஜெஸ்லி மனுவேல், வவுனியா ECBC ஸ்தாபகர் எஸ்.கிருஷ்ண்குமார், வவுனியா சர்வதேசப் பாடசாலை அதிபர் திருமதி.எலிசபெத் ஜேக்கப் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Related posts

*

*

Top