யாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் மாதாந்தத் திரைப்படக் காட்சி – 3 நாளை 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். பொதுசன நூலக – குவிமாட சிறிய கேட்போர்கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
அத்திரையிடலில் அடூர் கோபாலகிருஷ்ணனின் நெறியாள்கையில் உருவான ‘எலிப்பத்தாயம்’ (எலிப்பொறி) எனும் 1981 ஆம் ஆண்டு வெளியான 121 நிமிட மலையாள திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அனுமதி இலவசம். நிகழ்வில் ஆர்வம் உள்ள அனைவரையும் பங்குபற்றுமாறு பொதுசன நூலக வாசகர் வட்டம் அழைப்பு விடுத்துள்ளது.