மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

“நவாலியூர் ஜரோப்பிய மக்கள் ஒன்றியம்” மற்றும் “வாழ்வியல் அறக்கட்டளை” இணைந்து நடாத்திய மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு கடந்த 08.07.2017 சனிக்கிழமை காலை 11 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பார்வை குறைபாடுடைய பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேருக்கு நவாலியூர் ஜரோப்பிய மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியில் மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டன. அத்துடன் கடந்த வருடம் முதல் பல்வேறு உதவித்திட்டங்களை செயல்படுத்திவரும் “வாழ்வியல் அறக்கட்டளை” நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மருத்துவர் பவனந்தி கதிரேசு, மாணவர்கள் தான் எதிர்கால நம்பிக்கையென்றும் அவர்களை வலுப்படுத்தி வளப்படுத்துவதன் மூலமே சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அப்பணியை வாழ்வியல் அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில்  பாடசாலை மாணவர்கள், பயனாளர்கள் மற்றும்  நவாலியூரைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

வாழ்வியல் அறக்கட்டளை1 வாழ்வியல் அறக்கட்டளை வாழ்வியல் அறக்கட்டளை2

Related posts

*

*

Top