‘நீந்திக் கடந்த நெருப்பாறு’ நாவலின் இரண்டாம் பாகம் அறிமுக நிகழ்வு

மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின், ‘நீந்திக் கடந்த நெருப்பாறு’ நாவலின் இரண்டாம் பாகம் (பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை), கடந்த 08.07.2017 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

‘எழு கலை இலக்கியப் பேரவை’ ஒழுங்கு செய்த இந்நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் போஷகர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமை தாங்கினார்.  வரவேற்புரையை சி. நிஷாகரனும், நூலின் முதலாம் பாகம்பற்றிய குறிப்பினையும் – இரண்டாம் பாகம்  பற்றிய அறிமுகத்தினையும் கை. சரவணனும், நூல் பற்றிய கருத்துரைகளை கே. ரி. கணேசலிங்கமும் த. அஜந்தகுமாரும், நிகழ்த்தினர்.

நூலாசிரியரின் ஏற்புரையைத் தொடர்ந்து, சி. பீஷ்மன் நன்றியுரை ஆற்றினார். அத்துடன் வெளியீட்டு நிகழ்வு நிறைவுற்றது.

1 2 4 5 6 7

*

*

Top