களிமண் சிற்ப பயிற்சி நெறியின் இரண்டாவது பிரிவு விரைவில் ஆரம்பம்

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ஓவியக்கூடத்தில் கடந்த ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட களிமண்சிற்ப ஓராண்டு பயிற்சி நெறியின் இரண்டாவது பிரிவு எதிர்வரும் செம்ரெம்பர் மாதத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதனை நடத்துவதற்காக கொழும்பிலிருந்து கட்புல, ஆற்றுகைக் கலைகள் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு கற்கைநெறியின் பீடாதிபதி பேராசிரியர் சரத் சந்திர ஜீவா தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளார்கள். இப்பயிற்சியில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதால் இதில் இணைந்து கொள்ள ஆர்வமுடைய மாணவர்கள் இம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக தமது பதிவுகளை இல 128, டேவிற் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

கடந்த ஆண்டில் இப்பயிற்சி நெறியில் இணைந்துகொண்ட 19 மாணவர்கள் முழுமையாகக் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெற்று வெளியேறியமையும் இவர்களின் கைவண்ணத்தில் உருவான சிற்பக்கண்காட்சி கடந்த மே மாதத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top