கதிர் முன்பள்ளி சிறார்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு

Barack Obama

யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான பூநகரி, ஜெயபுரம் தெற்கில் உள்ள கதிர் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் 2500 ரூபாய் பெறுமதியான ஆடைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11.00 மணியளவில் கதிர் முன்பள்ளியில் நடைபெற்றது.

வாழ்வியல் அறக்கட்டளை நடாத்திய இந்நிகழ்வில் முன்பள்ளியில் பயிலும் 36 சிறார்களுக்கும் ரூபாய் 60,000 பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டது. சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து வருகைதந்த ஆர். இரவிந்திரன் மற்றும் நிர்மலநாதன் ஆகியோர் இவ்வுதவிகளை சிறார்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.  நிகழ்வில் தலைமையுரையாற்றிய அறக்கட்டளைத் தவைவர் சி.சிவயோகன் இப்பள்ளி தொடர்ந்து சிறப்பாக செயல்பட அடிப்படை வசதிகளான மின்சாரம் மற்றும் தண்ணீர் தாங்கி வசதிகள் எதிர்வரும் நாட்களில் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

*

*

Top