‘உளமுகம்’ உளவளத்துணை சஞ்சிகை வெளியீடும் பிரிவுபசார விழாவும்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன வரலாற்றில் ‘உளமுகம்’ சஞ்சிகை வெளியீடானது குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெறுமதி வாய்ந்த நிகழ்வாகும் என தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன கிளிநொச்சி பிராந்திய நிலைய கற்கைநெறி இணைப்பாளர் த. தர்ஸன் தெரிவித்தார்.

உளவளத்துணை டிப்ளோமா 2016 – 2018 ஆம் கல்வியாண்டு பயிலுனர்கள் நடத்திய ‘உளமுகம்’ உளவளத்துணை சஞ்சிகை வெளியீடும் பிரிவுபசார விழாவும் நேற்று 24.02.2018 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன கிளிநொச்சி பிராந்திய த்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

T. thirshan sir Speach

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…
மிகக் குறுகிய காலத்தில் தொழில்வாண்மையாளர்கள் மற்றும் உளவளத்துணை மாணவர்களிடமி ருந்து கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து வடிவமைப்பினை மேற்கொண்டு இந்நூலாக்கத்திற்கு உழைத்த நூலாசிரியர் அ.பெஸ்ரியன், அவரோடிணைந்து உதவிய செல்வி அ.அஜந்தா மற்றும் சி.சிவயோகன் ஆகியோருக்கும் எனது மனமுகந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேவேளை இந்நூலின் ஆசிரியர் இச்சஞ்சிகைக்கு ‘மனமே’ என பெயர் வைக்கலாம் என என்னிடம் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் உள்ள கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது ‘யாழ்முகம்’ எனும் நிகழ்சியை நடத்தியிருந்தேன். அந்நிகழ்ச்சி ஈழமக்களின் பிரச்சினைகளை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதாக அமைந்திருந்தது. அதனால் அங்கு பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. போலவே உளமுகம் எனும் பெயரானது ஒரு மனிதனுக்குள் காணப்படுகின்ற பல்வேறு முகங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக அமையும் என நம்புகிறேன்.

இச்சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள மாதிரி ஒழுக்கநெறிக் கோவை எவ்வாறு தனித்தவமாக அமையப் பெறவேண்டுமென நூலாசிரியருக்கு நான் அறியப்படுத்தியிருந்தேன். நேரான விளைவுகளைப் பெறவேண்டி சில சமயங்களில மறையான தாக்கத்தைச் செலுத்துவது தவிக்க முடியாததாகும். எனவே ‘உளமுகம்’ சஞ்சிகையின் உருவாக்கமும் அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் அமையப் பெற்றதாகும் என்றார்.

10

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். சத்தியசீலன் உரையாற்றியபோது, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் கிளிநொச்சி பிராந்திய நிலையம் தமது அளப்பெரும் சேவைகளை மிகவும் சிறப்பாக ஆற்றிவருகிறது என்பதற்கு உளவளத்துணை மாணவர்களின் இப்படைப்பு ஒரு சான்றாகும் என்றார்.

இதனைத்தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன சமூக அபிவிருத்திக்கான கொள்கை, ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பிரிவுவின் பணிப்பாளர் எம்.எஸ.எம் அஸ்மியாஸ் ‘உளமுகம்’ சஞ்சிகை வெளியீடானது தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக காணப்படுகிறது. இதுவரை காலம் சகோதர மொழிகளில் கல்விபயின்ற உளவளத்துணை மாணவர்கள் கூட செயல்படுத்தியிராத இம்முயற்சி ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது. இச்சஞ்சிகையின் தொடர் பதிப்பை உளவளத்துணை கற்கையினை மேற்கொள்ளும் அடுத்த மாணவ அணியினர் வெளிகொணர வேண்டும். எழுத்து வடிவில் படைக்கப்படும் ஆக்கங்கள் காலத்தின் கண்ணாடியாக பின்னாட்களில் பயன்படுத்தப்படும். இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என கூறினார்.

8

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த யாழ். பல்கலைக்கழக உளவியல், மெய்யியல் துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி க.கஜவிந்தன் உரையாற்றுகையில் சூழல் மனிதர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தகின்றது. எமது மக்களிடையே உளவளத்துணை பற்றிய பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. ‘உளமுகம்’ போன்ற சஞ்சிகைகளின் வருகை இம்மக்களிடத்தில் உள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றும் திறன்கொண்டது. இச் சஞ்சிகை முயற்சிக்காக பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சித் திட்ட அலுவலகர் திருமதி சர்மிளி சதீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் நிறுவன மயப்படுத்தப்பட்ட உளவளத்துணை, சிறுவர் பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு, சமூகப்பணி போன்ற கற்கைநெறிகளுக்கு யுனிசெப் நிறுவனம் பெருமளவான நிதியை வழங்கி வருகின்றது. உளவளத்துணை மாணவர்களினால் வெளியிடபட்ட இச்சஞ்சிகை எனக்கும்; தமது நிறுவனத்துக்கும் பெருமகிழ்ச்சியைத்தருகிறது என்றார்.

11

மதிப்பீட்டுரையினை கவிஞரும் தமிழாசிரியருமான முல்லை தீபன் வழங்கும்போது இந்நூலின் ஒட்டுமொத்த விடயங்களையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அட்டைப்படத்தில் பயன்படுத்திய வண்ணம் முதல்கொண்டு வடிவமைப்பு, ஒவ்வொரு கட்டுரைகளின் உள்ளடக்கம் மிகவும் சிறப்பாக அமைந்தள்ளது. உளவளத்துணையில் நிபுனத்துவம் வாய்ந்தவர்களால் கட்டுரை எழுதித் தொகுக்கப்பட்டுள்ளமை மக்களுக்கு மிகவும் பயனள்ளதாக அமைந்துள்ளது என்றார்.

நிகழ்விலே நூலாசிரியர் அ.பெஸ்ரியன், கலாநிதி க.கஜவிந்தனால் கௌரவிக்கப்பட்டார். மதிய விருந்தினைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் மற்றும் அனுபவப்பகிர்வு ஆகியவை இடம்பெற்றன.

9

நிகழ்வில் இருந்து மேலும் சில ஒளிப்படங்கள்…

01 23

Related posts

*

*

Top