குருநகர் சனசமூக நிலைய சிறார்களுக்கான போட்டி நிகழ்வுகள்

– பெகின்

குருத்தோலை ஞாயிறு சிறப்பு நிகழ்வாக நேற்று 24.03.2018 ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப சனசமூக நிலையத்தில் மாலை நேரக்கல்வி பயிலும் சிறார்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை உறுப்பினராக தெரிவாகியிருக்கும் செ.சத்தியசேகரன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பரிசில்களை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வை ஒழுங்கமைத்த யோசப்பாலா மற்றும் மகேந்திரனுக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் பெகின் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வில் சிறுவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறார்களை உச்சாகமூட்டினர்.

கடந்த வருடம் குருநகர் மேற்கு, கிராம அபிவிருத்தி சங்கத்தினால் புனரமைக்கப்பட்டு இவ்வருடம் தனது செயற்பாட்டை ஆரம்பித்திருக்கும் திருக்குடும்ப சனசமூக நிலையத்தில்  மேற்படி நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Gurunagar children sports meet (1) Gurunagar children sports meet (2) Gurunagar children sports meet (3) Gurunagar children sports meet (4) Gurunagar children sports meet (5)

Related posts

*

*

Top