புலவர் மு.பாலசுப்ரமணியத்தின் ‘சிறுவர் செந்தமிழ்ப் பாடல்கள்’ நூல் அறிமுக விழா

மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் ‘கருவி’ நடாத்தும் புலவர் மு.பாலசுப்ரமணியத்தின் சிறுவர் ‘செந்தமிழ்ப் பாடல்கள்’ நூல் அறிமுக விழா இன்று 07.04.2018 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நல்லூர் துர்க்கதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கருவி நிறுவனத் தலைவர் க.தர்மசேகரம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையினை கருவி நிறுவன நிர்வாக சபை உறுப்பினர் திருமதி சுபர்ணா டலிமா றெக்சனும் ஆசியுரையினை யாழ். நல்லை ஆதீன வணக்கத்துக்குரிய சோமசுந்தர பராமச்சாரிய சுவாமியும் சிறப்புரைகளை மொழித்திறன் பயிற்றுனர் காசிநாதர் விஜயராஜசிங்கமும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவும் கருவி நிறுவன நலச்சேவை இணைப்பாளர் கிருஷ்ணசாமி ஐங்கரனும் யாழ். வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் க.விமலநாதனும் தென்மராச்சி வலயம் ஆரம்பக்கல்வி முதன்மை ஆசிரியர் சி.சிவதாசனும் வழங்கவுள்ளனர். அத்துடன் நயப்புரையினை கவிஞர் சோ.பத்மநாதனும் ஏற்புரையினை நூலாசிரியர் புலவர் மு.பாலசுப்ரமணியமும் வழங்கவுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் ‘கருவி’ அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

*

*

Top