உள சமூக நண்பர்களுக்கான பயிற்சிப் பட்டறையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

– அல்பேட் பெஸ்ரியன்

ZOA நிறுவனத்தின் அனுசரனையுடன் ‘சேஞ்ச்’ நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட உள சமூக நண்பர்களுக்கான 10 நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று 11.05.2018 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு யாழ். கியுடெக் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விலே பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் ந. உதயகுமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக உளமருத்துவர் சிவதாஸ், ZOA நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் அன்ரனி கலீசியஸ், வசந்தக இயக்குநர் அருட்கலாநிதி டேமியன், தொடர்பக இயக்குநர் அருட்கலாநிதி டேவிற் வி. பற்றிக் மற்றும் கியுடெக் நிறுவன இயக்குநர் இயுஜின் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அருட்கலாநிதி டேவிற் வி. பற்றிக் உரையாற்றுகையில்…

Fr. Vincent

இது வதிவிடப் பயிற்சிப் பட்டறையின் 10 நாள் அறுவடை நேரம். மிகவும் மகிழ்ச்சியான தருணம். வயது எல்லை தாண்டி பயிற்சி பெற்ற அனைவரும் சமூக சேவையில் ஈடுபடவும் சமூகத்தில் பெரிய மாற்றத்துக்கான விதையாகவும் உருவாகவே இங்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சிப் பட்டறைக்கு நிதியுதவி வழங்கிய ணுழுயு நிறுவனத்திற்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், பயிற்சிப்பட்டறைக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய யோசப்பாலா மற்றும் அல்பேட் பெஸ்ரியன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உளமருத்துவர் சிவதாஸ் உரையாற்றுகையில்…

1
சமூகப் பணியாளராகிய நாங்கள் எண்ணுகிறோம் ஒரு சில விடயங்களைக் கடந்து விட்டால் அல்லது கடக்க உதவிபுரிந்தால் சமூகம் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளும் என ஆனால், அமைப்பு ரீதியான மாற்றம் ஒன்று ஏற்படாதவரை பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது சாத்தியமற்றது. இதுவே தற்போதைய உள சமூக நிலைமையாகும்.

சின்னச் சின்ன விடயங்களைச் செய்து நம்மைநாமே திருப்திப்படுத்திக் கொள்ளலாமே தவிர அமைப்பு ரீதியாக முழுமையான மாற்றம் ஒன்று ஏற்படாதவரை பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்பது எனது கருத்து. எங்களது இளைஞர், யுவதிகளை சமூகப் பணிக்கு தயார் செய்வது அவசியம் ஏனெனில் அவர்களுக்கே எமது நிலையும் எம்மவர்களின் பிரச்சனைகளை தாங்கும் மனஉறுதியும் அதிகம். இந்தப் பயிற்சி நல்ல மாற்றம் அல்லது தொடக்கம் இதிலிருந்து மாணவர்களாகிய நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு கோணங்களில் சிந்திக்க இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவி செய்யலாம். நீங்கள் வருங்காலத்தில் சமூகப் பணியினை மேற்கொள்ளத் தொடங்கும்போது பல இடர்களைச் சந்திக்க நேரலாம். அதனால் மனமுடைந்து போகாது தொடர்ந்து பணியாற்றுங்கள். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை மட்டும் மனதில் வையுங்கள். இந்தப் பயிற்சிப்பட்டறையை நடாத்திய அருட்கலாநிதி டேவிற் வி.பற்றிக் அடிகளாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ZOA நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் அன்ரனி கலீஸியஸ் உரையாற்றிய போது…

25
ZOA நிறுவனத்தின் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலந்துரையாடும் போதும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மதுபோதை மற்றும் போதைப்பாவனை மூலகாரணமாக அல்லது முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபோதைப் பாவணையால் பாதிக்கப்பட்டு குடும்ப வன்முறைக்கு உள்ளான ஏராளமான குடும்பங்களை சந்திக்க நேரிட்டது. அவர்களுக்கான பணியை அருட்கலாநிதி டேவிற் வி. பற்றிக் அடிகளாருடன் இணைந்து ‘சேஞ்ச்’ நிறுவனத்தினூடாக செய்து வருகிறோம். அந்த நிகழ்சித்திட்டத்தின் ஒரு செயல்திட்டமாகவே இந்த உள சமூக நண்பர்களுக்கான 10 நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை மேற்கொள்ளப்பட்டது. இப்போதைய காலகட்டத்தில் மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு தன்னார்வத் தொண்டர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். அவர்களுக்குள்ளும் இந்த 19 பேர் பயிற்சிகளைப் பெற்று தங்களுடைய கிராமத்துக்குப்போய் தாம் தம்மை பலப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இதைப் பயன்படுத்தி கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் பலப்படுத்தி அவர்களை அழிவுப்பாதையில் இருந்து பாதுகாக்க முன்வருவது சாதாரண காரியமல்ல. அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மாற்றம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து வர வேண்டும். அப்போதுதான் அது நிலையாக இருக்கும். பயிற்சி பெற்ற உள சமூக நண்பர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு முன்ணுதாரணமாக இருப்பீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். முடிந்தவரை பிரச்சனைகளுக்கு உள்ளானவர்களை அதிலிருந்து வெளிக்கொணர உதவவேண்டும் அதற்கு எமது நிறுவனம் தொடர்ந்து உதவிபுரியும் என்றார்.

யாழ். உளவளத்துணை இணைப்பாளர் ந. உதயகுமார் உரையாற்றுகையில்…

4

சமூக மட்டத்தில் பல்வேறு விதமான உளசமூகப் பிரச்சனைகள் எம்மத்தியில் காணப்படுகின்றன. மாறிக்கொண்டிருக்கும் சூழலும் தொழில்நுட்பமும் உளவியல் பிரச்சனைகளின் தாக்கத்தை அதிகரித்த வண்ணம் உள்ளன.

எமது மாவட்டத்தில் பல்வேறுபட்ட நிறுவனங்கள், அமைப்புகள். குழுக்கள் பலருக்கும் பயிற்சிகளை வழங்கியிருந்த போதிலும் வளவாளர் பற்றாக்குறை தொடர்ந்து காணப்படுவதுடன். அவர்கள் உளவள சேவையில் தொழில்ரீதியாக ஈடுபடுபடுவது மிகவும் குறைவாகவே உள்ளது. எம்மைப் பொறுத்தவரையில் கற்றலைவிட செயற்பாடுதான் முக்கியமானது. எனவே பிரச்சனைகள் வந்தபின்பு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து அதை வருமுன் தடுப்பதே சிறந்ததாகும். இந்த 19 இளைஞர்களும் யுவதிகளும் பயிற்சியைப் பெற்று தமது சேவையை மக்கள் மத்தியில் புரிவதன் மூலம் உளரீதியான ஆற்றுப்படுத்தலை மேற்கொள்ள முடியும். தொடர்ந்தும் இந்தத் துறையில் பயிற்சி பெற்று மக்களுக்காக செயல்படுவார்கள் என நம்புகிறேன். இந்தப் பயிற்சியை நடாத்திய அருட்கலாநிதி டேவிற் வி. பற்றிக் அடிகளாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அருட்தந்தை யாழ். மாவட்டச் செயலகத்துடன் இணைந்து தொடர்ந்தும் மதுபோதைக்கு எதிரான நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டு வருகிறார், அவர் எமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த வளமாகக் காணப்படுகின்றன என்றார்.

0 01 2 3 5 6 8 9 17 18 27 28 35

Related posts

*

*

Top