யாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி

– பெஸ்ரியன்

தேவனி இஎஸ்ஏ நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக்

கண்காட்சி ((Photo Fair 2018) சனி மற்றும் ஞாயிறு (21,22) ஆகிய இரு தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஜெட்விங் விடுதியில் நடைபெற்றது.

இக்கண்காட்சியின் பிரதான அனுசரணையாளர்களாக சொனி (Sony), கமரா.எல்கே (Camera.lk), டியிமாக்ஸ் (Digimax) ஆகிய நிறுவனங்கள் பங்கெடுத்திருந்தன.

கனொன் (canon), கொனிக்கா (konica), நிக்கொன் (nikon), ஃபியூயி(fuji), மிஸ்ருபிசி(mitsubishi), டீபக்(debag) போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான புகைப்பட மற்றும் வீடியோ கருவிகள், புகைப்படங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெவ்வேறு தரம் மற்றும் அளவுகளிலான புகைப்பட அட்டைகள், அதற்குரிய வண்ணங்கள், புகைப்படக் கருவிகளுக்குத் தேவையான துணை உபகரணங்கள், பெனர் தயாரிப்பு சாதனம் மற்றும் உபகரணங்கள், ஆடைகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடிகள் போன்றவற்றில் அச்சிடுவதற்குரிய சாதனங்கள், அடையாள அட்டை தயாரிப்பு கருவிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவற்றுடன் சேயா கலர்(seya colour) எனும் வெவ்வேறு வகையான புகைப்படக் கோப்புகளை (அல்பம்) உருவாக்கும் நிறுவனமும் தமது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தது.

புகைப்படம் மற்றும் வீடியோ துறைசார்ந்தோர, ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

ஒளிப்படங்கள் : பெகின்

Photo & Video Fiar 2018 (1) Photo & Video Fiar 2018 (2) Photo & Video Fiar 2018 (3) Photo & Video Fiar 2018 (4) Photo & Video Fiar 2018 (5) Photo & Video Fiar 2018 (6) Photo & Video Fiar 2018 (7)

 

 

 

Related posts

*

*

Top