தமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு

தமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு எதிர்வரும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் வடஇலங்கை சங்கீத சபை, மருதனார்மடம், யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நடனத்துறை முதுநிலை விரிவுரையாளர் அருட்செல்வி கிருபைராஜா அவர்களின் தலைமையில் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலை 9.30 முதல் 4.30 வரை கலாயோகி ஆனந்தக்குமாரசாமி அரங்கு எனும் தலைப்பில் நடைபெறும் நிகழ்வில் தலைமை உரையினைத் தொடர்ந்து நோக்குரையினை இரமநாதன் நுண்கலைக்கழக மேனாள் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசாவும் சிறப்பு இதழ் வெளியீட்டுரையினை கல்விசார் இதழாசிரியர் தெ. மதுசூதனன் அவர்களும் செய்யவுள்ளனர்.

ஆய்வரங்கில் ‘தமிழ் ஆடலியல் பன்மைநோக்கு’ எனும் தலைப்பில் முதலாவது அமர்வு சனி காலை 9.30 முதல் 12.30 வரை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் அமர்வில் ‘தமிழர் அகவாழ்வும் ஆடலும்’ எனும் தலைப்பில் தலைவன் – தலைவி, பாணன் – பாடினி அடிப்படையாகக் கொண்ட ஆய்வு முனைவர் ஜெ. அரங்கராஜ் அவர்களாலும்  ‘தமிழ் வீரயுக ஆடல்கள்’ எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை சிரேஸ்டவிரிவுரையாளர் முனைவர் துஸ்யந்தி ஜெயப்பிரகாஸ் அவர்களாலும் ‘தொல்காப்பியம் சுட்டும் தமிழ் ஆடற்கோலங்கள்’ எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் முனைவர் உஸாந்தி நேசகாந்தன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை  தகுதிகாண் விரிவுரையாளர் இராசரெட்ணம் சோபிதர் ஆகியோராலும் நிகழ்த்தப்படவுள்ளது.

இரண்டாவது அமர்வில் மாலை 1:30 முதல் 4:30 வரை முனைவர் செ. அரங்கராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் அமர்வில் ‘சிற்றிலக்கியங்கள் தரும் தமிழ் ஆடற்செய்திகள்’ எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் முனைவர் சர்மிளா ரஞ்சித்குமார் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை போதனாசிரியர் கணேசராசா துவாஸ்கர் ஆகியோராலும் ‘நாயன்மாரும் பக்திநெறிக்கால ஆடலும்’ எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந. பரந்தாமன் அவர்களாலும் ‘பழந்தமிழர் ஆடலில் இசை’ எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக தலைவர் இசைத் துறை முதுநிலை விரிவுரையாளர் கிருபாசக்தி கருணா அவர்களாலும் நிகழ்த்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஞாயிறு  காலை 9.30 முதல் 4.30 வரை பேராசிரியர் சிவசாமி அரங்கு எனும் தலைப்பில் நடைபெறும் நிகழ்வில் மூன்றாவது அமர்வு தெ. மதுசூதனன் தலைமையில் நிகழவுள்ளது.  இந் நிகழ்வில்  ‘கூத்துமரபும் தமிழ் ஆடல் மரபும்’ எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக் கழக நடன, நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் முனைவர் தாட்ஸாயினி பரமதேவன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை தகுதிகாண் விரிவுரையாளர் அரங்கரெட்ணம் சஜித் ஆகியோராலும் ‘தமிழ் ஆடல் அடையாளங்களைக் கண்டுகொள்ளக் கூடிய தற்கால நாட்டார் ஆடல் வடிவங்கள்’ எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக நடனத்துறை முதுநிலை விரிவுரையாளர் அருட்செல்வி கிருபைராஜா அவர்களாலும்  ‘அரங்கப் புலமையாளர்கள் அன்றும் – இன்றும் சிலப்பதிகார அரங்கேற்றுக் கதையைத் தளமாகக் கொண்ட ஒப்பிட்டாய்வு’ எனும் தலைப்பில்  யாழ். பல்கலைக்கழக இசைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் முனைவர் சுகன்யா அரவிந்தன் அவர்களாலும்  ‘பரதநாட்டியக் கச்சேரிகளில் தமிழிசையின் வகிபாங்கு’ எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் பரமேஸ்வரி கணேசகம்பர் அவர்களாலும் நிகழ்த்தப்படவுள்ளது.

நான்காவது அமர்வுவில் மாலை 1:30 முதல் 4:30 வரை பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில்  ‘சோழர்கால ஆடல் கோலங்கள் – கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர். செ. கிருஸ்ணராஜா அவர்களாலும்  ‘இந்திய சுதந்திரப் போரட்டத்தில் செல்வியல் ஆடல் மீட்பும் சமஸ்கிருதமயப்படுத்தலும்’ எனும் தலைப்பில்  பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறை பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்களாலும் ‘ஈழத்துத்தமிழ் ஆடல் மரபு – தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக தலைவர், வரலாற்றுதுறை பேராசிரியர். ப. புஸ்பரட்ணம்  அவர்களாலும் ஆய்வுரைகள் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து  கலந்துரையாடலும் நிறைவுரையும் இடம்பெறும்.

Tags , , , , , , , , , , , , , , , , , , , , ,

Related posts

*

*

Top