பூவரசம் பூ – வி. எப். யோசப்

– வி. எப். யோசப்

முனியப்பரின் முன்னாலேயே
புத்தரின் போதியொன்று
பூவரசொன்றை பக்கம் அனைத்திலும்
இறுக நசித்து வளர்கிறது
போராடும் பூவரசோ
போதியின் தடுப்புகளூடே கைநீட்டி
ஒற்றைப் பூவை மலர்ந்திருக்கிறது
புளுனிக் குஞ்சுகளின்
கண்ணில் நீர் திரள்கிறது.

– யாழ். முனியப்பர் கோவிலுக்கு முன்னால் பொதுசன நூலகம் அருகே பூவரச மரத்தைச் சூழ்ந்து நெருக்கும் அரச மரத்திற்கு ஊடாக பூத்திருக்கும் பூவரசு.

 

Muniyappar sits
with his mouth gagged
one bodhi of buddah
growing while crushing all around
a poovarasu or portia
through the strangling holds
stretched is a hand
of the struggling portia to bloom
a single flower
at the end of its
valiant hand
tears welled up
in my eyes.

Related posts

*

*

Top