ஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு

‘ஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை’ நூல் வெளியீட்டு விழா நாளை 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ். பொதுசன நூலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பேச்சாளர்களாக யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமிநாதன் விமலும் செந்தாரகை ஆசிரியர் சிறிநாத் பெரேரா மற்றும் ஐக்கிய சோஷலிச கட்சி பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நூல் கடந்த இருபது வருட காலத்தில் ஐக்கிய சோஷலிச கட்சியின் வெளியீடுகளான செந்தாரகை மற்றும் ரதுதருவ பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு  ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு முக்கிய கால கட்டத்திலும் மார்க்சிய கட்சி என்ன செய்தது, அவர்தம் பார்வை என்னவாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளவும் எதிர்கால திட்டமிடல்களை வகுத்துக் கொள்ளவும் உதவும் நூல் இது என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூல் வெளியீட்டுடன் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

Related posts

*

*

Top