யாழ். புத்தகத் திருவிழா நாளை ஆரம்பம்

யாழ். புத்தகத் திருவிழா நாளை 27.08.2019 செவ்வாய்கிழமை ஆரம்பமாகி தொடா்ந்து ஆறு நாட்களுக்கு 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இலங்கை புத்தக விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்துடன் இணைந்து இப் புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

ஆரம்ப வைபவம் 27.08.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும். பிரதம விருந்தினராக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைப்பார்.

இலங்கை புத்தக விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் கொழும்பு, பண்டாரநாயக்க மண்டபத்தில் புத்தக விழாவை நடத்தி வருகிறது. இச் சங்கம் தப்போது முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் புத்தக விழாவை ஒழுங்கு செய்துள்ளது. இப் புத்தகத் திருவிழாவின் பிரதான அனுசரணையாளா் பூபாலசிங்கம் புத்தகசாலை நிறுவனமாகும் .

யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இங்கு 21 (இருபத்தியொரு) புத்தக விற்பனையாளர்கள் தமது நூல்களை காட்சிப்படுத்துவார்கள்.

மொத்தம் 32 காட்சிக் கூடங்கள் இம் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஐசிபிடி நூல் நிறுவனம், கவிதா புத்தக நிலையம், இலங்கை குமரன் புத்தக நிலையம், சேமமடு, புக்வின், புக்லெப் ஆகிய தமிழ் நூல் விற்பனை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இக் கண்காட்சியில் எக்ஸ்போ கிரபிக், எம்.டி.குணசேன, கொடகே விஜித யாபா, சரசவிய உட்பட பல சிங்கள முதன்மை நூல் விற்பனை நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. பெருமளவிலான தமிழ், ஆங்கில நூல்கள், கல்விசார் நூல்கள் மற்றும் உசாத்துணை நூல்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. பூபாலசிங்கம் இருபது ஆயிரம் வெவ்வேறு தலைப்புகளிலான நூல்களை காட்சிப்படுத்தவிருப்பதாக அதன் உரிமையாளர் ஸ்ரீதர் சிங் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் புத்தகத் திருவிழா மாலை 6.00 மணிக்கு நிறைவடையும்.

அனைத்து புத்தக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இலக்கங்கள் 

Book fair Shore list 2019

*

*

Top