பேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு

பேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்களான ”நோக்கு” மற்றும் ”A Sopa Miscellany”  நாளை 14.09.2019 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு  யாழ்ப்பாணம், நீராவியடி, இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வின் தலைமையினை பேராசிரியர். சி. சிவலிங்கராசாவும் வாழ்த்துரையினை பேராயர் அதிவண. சு. ஜெபநேசனும்  வெளியீட்டுரையினை பேராசிரியர் நா. சண்முகலிங்கனும் வழங்கவுள்ளனா்.  ”நோக்கு” நூல் வெளியீட்டின் முதற்பிரதியினை எச்.எஸ்.பி.சி வங்கியின் முகாமையாளா் சி. அரவிந்தனும் ”A Sopa Miscellany” நூல் வெளியீட்டின் முதற்பிரதியினை மூத்த வழக்கறிஞா் V.T. சிவலிங்கமும் பெறவுள்ளனா்.

நூல் மதிப்பீட்டுரையினை யாழ். பல்கலைக்கழக கணிதவியற்துறை பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராசாவும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை  முதுநிலை விரிவுரையாளர் ஈ. குமரனும் வழங்கவுள்ளனா். ஏற்புரையினை நூலாசிரியா் வழங்குவாா்.

*

*

Top