குமாரசாமி குமாரதேவன் காலமானார்

சமகாலத்தின் மிக முக்கியமான வாசகராகவும் நுண்ணுணர்வுடன் கூடிய விமர்சகராகவும் மிகக் கூர்மையான நினைவாற்றலுடன் அரசியல். இலக்கியம். சமூகம். திரைப்படம் என்று பல்வேறு தளங்களிலும் ஆழ்ந்தகன்ற அறிவும் புலமையும் கொண்டவருமான குமாரசாமி குமாரதேவன் நேற்று 15.11.2019 வெள்ளிக்கிழமை காலமானார்.

டிசம்பர் 10, 1960 அன்று காரைநகரிலுள்ள கோவளத்தில் பிறந்த குமாரதேவன் தனது சிறுவயதிலிருந்தே தீவிரமான வாசிப்பிலும் தேடலிலுமாக தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர். அண்மைக்காலமாக ஈழத்தில் நடந்த பல்வேறு சமூக, அரசியல், இலக்கியக் கூட்டங்களிலும் உரையாடல்களிலும் தன் வாசிப்பினாலும், புலமையினாலும், நேர்படப் பேசுகின்ற பண்பினாலும் அனைவராலும் மதிக்கப்பட்டு சமகால வாசகர் தரப்பின் முதன்மை அடையாளமாக விளங்கியவர் குமாரதேவன்.

*

*

Top