ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் காலமானாா்

ஈழத்துக் கலை உலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் நேற்று 22.04.2020 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அவருக்கு வயது 85.

மலேசியாவில் 1935ஆம் ஆண்டு பிறந்த ரகுநாதன் ஜயா, ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் 1947ம் ஆண்டு அக் கல்லூரியிலேயே முதல்முதலாக தனது நாடகத்தை அரங்கேறினார். கலையரசு சொர்ணலிங்கத்திடம் நாடகக்கலையை பயின்ற இவருக்கு தேரோட்டி மகன் நாடகம் பெரும் புகழைக் கொடுத்தது.

பல மேடை நாடகங்களில் நடித்த இவர் கடமையின் எல்லை என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலாக நடித்திருந்தார். ஈழத்தின் நான்காவது திரைப்படமான நிர்மலாவை இவரே தயாரித்து நடித்தார். கொழும்பில் அரச பணியில் இருந்தவர் தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தெய்வம் தந்த வீடு திரைப்படத்தில் நாயகனாகவும் தோன்றினார்.

சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என எழுத்துச் செயல்பாட்டில் ஈடுபட்டாலும் நாடகத்தில்தான் அதிக நாட்டமும் இருந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் எஸ்.டி.அரசு, கொழும்பில் சுவைர் ஹமீட், லடீஸ் வீரமணி என்று அந்தக் காலத்தில் மிகச்சிறந்த நெறியாளர்கள் நெறியாள்கையில் நடித்திருக்கிறாா். அதேபோல் புலம்பெயா்ந்து சுவிஸில் இருக்கும் அன்ரன் பொன்ராஜ், சுபாஷ் என்று பலருடைய நெறியாள்கையில் நடித்திருக்கின்றாா். பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரகுநாதன் அங்கும் நாடகம் மற்றும் திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்தார்.

*

*

Top