மருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார்

வைத்திய நிபுணர் செங்கமலம் தெய்வேந்திரன் இன்று 23.04.2020 வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.

யுத்தத்தினாலும் நோய் மற்றும் விபத்துக்களினாலும் தமது அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தி அவர்களை மாற்றுவலுவுள்ளோராக உருவாக்கம் செய்யும் மனிதநேயப் பணிபுரியும் யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர்.

இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 1987ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொருளாளராகச் சேவையாற்றியவர். வைத்திய நிபுணராக கடமையாற்றிய இவர் தனது ஓய்வு காலத்தின் பின்னும் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துச் சேவை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top