அழகான புது உலகம் படைப்போமே…

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ”அழகாக புது உலகம் படைப்போமே” என்ற காணொளிப் பாடலில்  இலஞ்சம் எவ்வளவு தூரம் சமூகத்தைப் பாதித்துள்ளது, அதனைச் சீா்செய்ய வேணடும் எனும் கருப்பொருளை மையமாக வைத்தே இப்பாடல் உருவாகியுள்ளது.

யாழ்.என்டொ்டைமென்ட் நிறுவனத்தின் வெளியீடாக  பிரியனின் இயக்கம் மற்றும் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை சாளினி சாள்ஸ் எழுதியுள்ளாா். இப்பாடல் ரசிகா்கள் மற்றும் பாடகா்களிடம் நல்ல வவேற்பைப் பெற்றுள்ளது.

”அழகான புது தேசம் படைப்போமே
அதை எங்கள் உயிா் போல காப்போமே
நம்நாட்டில் படிந்துள்ள இலஞ்சஊழல் கறையாவும்
நோ்மை எனும் தூய்மை கொண்டு துடைப்போமே”

எனப் பாடலில் வரும் தொடக்க வரிகள் மிக ஆழமானவையாக உள்ளன. இப்பாடலை எழுதிய சாளினி சாள்சை பாராட்ட வேண்டும்.

சா்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நெஷனலினல்  நிறுவனம் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பாடலாக இப்பாடலை தெரிவு செய்தமை, யாழ். இளம் படைப்பாளா்களுக்கு உந்துசக்தியாக அமையும். யாழ்ப்பாணத்தில் பல இவ்வாறான இளம் படை்பாளிகள் உள்ளனா். அவா்களின் நல்ல படைப்புக்கள் சா்வதேசத்தின் பாா்வைக்கு செல்லும் போது மக்கள் மத்தியில் குறித்த படைப்புக்கள் பேசப்படும். இதனால் தொடா்ந்து ஆரோக்கியமான படைப்புக்கள் வெளிவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சமூகத்தில் சடுதியாக மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இளைஞா்கள் உள்ளனா். அதனையே கவிஞா் இளையோரே இணைக புதுயுகம் படைப்போம் என அறைகூறல் விடுத்துள்ளாா். சா்வதேச தரத்திற்கு இணையான படைப்பினைக் கொடுத்த இப்படைப்பாளிகளைப் பாராட்ட வேண்டும்.

இப்பாடலை கரிகணன் மற்றும் ஜனித் கலிங்க குணசேகரா ஆகியோா் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*

*

Top