வடக்கின் அச்சுக்கலையின் முன்னோடி “கரிகணன்”

வடக்கின் அச்சுக்கலையின் முன்னோடியாக விளங்கும் கரிகணன் அச்சுப்பதிப்பு நிறுவனம் கல்வி, கலை, பண்பாடு, இலக்கியம், சமயம் போன்றவை தொடர்பான சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்கள் ஆகிய வெளியீடுகளின் அச்சுப்பதிப்புகளுக்கு விஷேட விலைக்கழிவு வழங் குகிறது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக வெளியீடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் கரிகணன் அச்சுப்பதிப்பகத்தினை அணுகி தமது படைப்புகளை விஷேட விலைக்கழிவுடன் அச்சுப்பதிப்பினை மேற்கொண்டு வெளியீட்டுக் கொள்ள முடியும்.

ஈழத்தில் புதிய படைப்புகள் அருகிவரும் நிலையில் படைப்புகளின் நன்மை கருதியும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் அருகிவரும் எம் படைப்புகள் எதிர்கால சந்ததியினருக்குச் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடனும் வடக்கில் முதல்முறையாக கரிகணன் நிறுவனத்தினால் இம்முயற்சியினை மேற்கொண்டு படைப்பாளிகளுக்கு விஷேட விலைக்கழிவினை வழங்குகின்றனர்.

வடக்கில் தற்போதுள்ள பிற அச்சுப்பதிப்பு நிறுவனங்கள் வியாபார நோக்கில் மட்டுமே செயற்பட்டு வருகின்ற நிலையில் கலை, பண்பாடு, இலக்கியம், சமயம், கல்வி ஆகியவற்றின் இளம் படைப்பாளிகளுக்கு கரிகணன் அச்சுப்பதிப்பு நிறுவனத்தின் விஷேட விலைக்கழிவு வழங்கப்படுகின்றமை ஊக்கமளிக்கும்.

 

செயல்பாடுகள் :

 கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்றுக் கிடந்த தொல்லியல் சம்மந்தமான வரலாற்றுப் பதிப்புகளின் புகைப்படங்களை தொடர்ந்து 5 வருடங்கள் தமது கலண்டரில் வெளியிட்டமை.

 கடந்த 15 வருடமாக யாழ்.மண்ணில் பிரசித்தி பெற்ற பிரபலங்களின் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டமை.

 நாட்டுடைமைப் பதிப்புக்கள், சமய ஆன்மீகப் பதிப்புகள், சிறுவர்களுக்கான கல்விசார் பதிப்புக்கள் மற்றும் இளம் எழுத்தாளர்களின் பதிப்புக்கள் போன்றவற்றின் அச்சுப்பதிப்பினைத் தரமாக மேற்கொண்டமை.

 நாவலரின் சிறப்புகள் பற்றிய நூலினை இலவசமாக வெளியிட்டமை.

 பல்வேறு பதக்கங்கள், ஞாபகார்த்த சின்னங்கள், வெற்றிச்சின்னங்கள், கேடயங்கள் என்பவற்றினை தரமாக முறையில் தயார் செய்து கொடுத்தல்.

 அதிகளவு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நவீனரக அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்துள்ளமை.

 வடக்கில் முதல்முறையாக பிரம்மாண்டமான திருமண அழைப்பிதழ்களுக்கான காட்சியறையினை உருவாக்கியமை,

 வடக்கில் முதல்முறையாக ஜேர்மன் தொழில்நுற்பத்தில் Digital  அச்சுமுறைமையினை அறிமுகம் செய்தமை.

 Digital அச்சு முறையில் பாரிய அளவில் மேற்கொண்டு வருவதோடு, வியாபார ஸ்தாபனங்கள், தனியார் நிறுவனங்கள் என்பவற்றுக்கான பெயர் பலகைகள், மின்னொலி முறையிலான பெயர்ப்பலகைகள், இலத்தரனியியல் பெயர் பலகைகள் மற்றும் புதிதாக முப்பரிமாண பெயர்ப்பலகைகள் என்பவற்றைத் தரமான முறையில் உருவாக்கும் தன்மை.

 வட பிராந்தியத்தில் Digital அச்சு முறையில் முன்னோடிகளாக விளங்குவதோடு வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அரச, தனியார் நிறுவனங்களுக்கான Digital Boardingகளை நிறுவியமை.

 வட பிராந்தியத்தில் பிரம்மாண்டமான Digital Holdingகளை உருவாக்குவதில் தொடர்ந்தும் முன்னிலையில் பணியாற்றி வருகின்றமை.

 இந்தியாவில் வடிவமைக்கப்படுகின்ற திருமண அழைப்பிதழ்களுக்கு ஈடாக வடக்கிலும் திருமண அழைப்பிதழ்களை தயாரித்து வருகின்றமை.

 இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் வடிவமைப்பு வல்லுனர்களினால் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்பட்ட கரிகணன் ஊழியர்கள் திருமண அழைப்பிதழ்களுக்கான  பணிகள் மேற்கொள்ளுகின்றமை.

 திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் பாரிய கைத்தொழில் முறையை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளமை.

 2012இன் இறுதியில் சகல அச்சு இயந்திர ஊடக வசதிகள் அடங்கிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றமை.

சவால்கள் :

• யாழ்ப்பாணம் கடந்த 1990-2002 காலப்பகுதிகளில் போர் உச்ச நிலையினை அடைந்திருந்தது அவ்வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான தரைவழிப்பாதை (A9) போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையினால் அக்காலப்பகுதிகளில் வியாபார விஸ்தரிப்பு மேற்கொள்ள முடியாத காலமாக இருந்தது. அந்நிலையில் 2000ஆண்டு காலப்பகுதியிலேயே கரிகணன் நிறுவனத்தை இரண்டு ஊழியர்களுடன் ஆரம்பித்தமை.

• 2002 ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் தரைவழி போக்குவரத்து ஏற்பட்டது இதனால் தேவைகளும் அதிகரித்தது. வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய அச்சு இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை. அத்துடன் பல வண்ணப் பதிப்புகளை வடக்கு மக்களுக்கு புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை.

• போட்டியாளர்களை சமாளிக்கும் பொருட்டும், புதிய டிசைன்களை வாடிக்கையாளர்கள் விரும்புவதினால் இந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களை 2003ஆம் ஆண்டு கொழும்புக்கு அனுப்பி நவீன அச்சுக்கலை, போட்டோ எடிரிங், டிசைனிங் போன்றவற்றினை கற்பித்து நவீன முறையில் அச்சுப்பதிப்பினை மேற்கொண்டு வருகின்றமை.

• வாடிக்கையாளர்களின் நலக்கருதி 2005 ஆம் ஆண்டு – K சீறிஸ் 2008 ஆம் ஆண்டு – K சீறிஸ் என இரண்டு நவீன இயந்திரங்களைவ வடக்குக்கு கொண்டு வரப்பட்டமை.

• வாடிக்கையாளர்களின் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்யும் பொருட்டு தானியங்கி மடிப்பு இயந்திரம், புத்தகம் கட்டும் இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டமை.

• 2007ஆம் ஆண்டு போர் உச்ச நிலையிலிருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் பதற்ற சூழலில் இருந்தமையினால். அவ்வேளையில் நாட்காட்டி தடைப்பட்டிருந்தது. அப்பொழுது இந்நிறுவனத்தினால் நாட்காட்டி வெளியிடப்பட்டது அத்துடன் இரகுநாதன் ஜயரின் வாக்கியம் பஞ்சாங்கத்தினை கனித்த மாதாந்த நாட்காட்டி வெளியிடப்பட்டது.

• தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகரித்தமையினால் 2011இல் 58 வீதமாக இருந்த இந்நிறுவனத்தின் வளர்ச்சி 2012இல் 90 வீதமாக உயர்வடைந்தது. இதனால் எமது நிறுவனத்தில் 50பேராக இருந்த ஊழியர்கள் 150 பேராக உயர்வடைந்தனர்.

 

விருதுகள்:

 வடமாகாணத்தில் சிறந்த அச்சுப்பதிப்பாளர் என்ற விருதினை கடந்த 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியிட மிருந்து பெற்றுக் கொண்டமை.

 ஜனாதிபதி விருதினை தொடர்ந்து நான்குமுறை பெற்றுக் கொண்ட சிறப்பு இந்நிறுவனத் தையே சாரும்.

  தொடர்ந்து 15 வருடங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் ஒரேயொரு அச்சுப்பதிப்பகம்.

 வடக்கு, அரச சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஓரேயொரு பதிப்பகமாக விளங்குகின்றமை.

 டிசம்பர் 2014இல் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பு விருதினையும் பெற்றுக் கொண்டுள்ளது.

 வடக்கின் அச்சகத்தாரர் எனும் மகுட வாசகத்தினை பெற்றுள்ளமை.

 

உதவிக் கரங்கள்:

 இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தல், அவர்களின் படைப்புகளுக்கு அனுசரனை வழங்குகின்றமை.

 குறும்பட இயக்குனர்களை ஊக்குவித்தலும், வழிகாட்டலும்.

 யாழ்.கலைஞர்களை புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

 சமயம், சமயப் பெரியார்கள் என பல இலவச புத்தகங்களை வெளியிட்டமை.

 பாடசாலை மட்டங்களில் நடைபெறுகின்ற கல்விசார் முயற்சிகளுக்கு அனுசரனை வழங்கியமை

 யாழ்ப்பாணத் தமிழ்சங்கம் நடாத்திய நாவலர் விழாவினைத் தொடர்ந்து அந்நிறுவனம் நடத்துகின்றமை

 25 வீதமான மாற்றுத்திறனாளி ஊழியர்களை தமது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தியமை.

 இந்நிறுவனத்தில் 150பேரை ஊழியர்களாக இணைத்துக் கொண்டமை.

 கல்வி, கலை, சமயம், பன்பாடு, இலக்கியம் சம்மந்தமான வெளியீடுகளுக்கு விஷேட விலைக்கழிவு வழங்குகின்றமை.

 குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு இலவசமாக தமது நிறுவனத்தை வழங்குகின்றமை.

*

*

Top