ஊர் அறிய பேர் அறிய! – புதுக்குடியிருப்பு

இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த ஒருதொகுதிக் காட்டை அழித்து அதிலே புதிதாக மக்கள் குடியேறினர். இக் குடியேறிய இடத்திற்கு  புதுக்குடியிருப்பு என்று பெயர் சூட்டினர். காலப்போக்கில் புதுக்குடியிருப்பென்றே அழைக்கலாயினர். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த இவ்வூர் 47.2 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டமைந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவு 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இங்கு 2074 குடும்பங்களைச் சேர்ந்த 6401 அங்கத்தவர்கள் உள்ளார்கள். இதில் 2960 பேர்கள் ஆண்களும் 3431 பேர்கள் பெண்களும் உள்ளனர்.

– ஜெயம் ஜெகன்

*

*

Top