அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்ரீராமநாம கானாமிர்தம் இசைவேள்ளி

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் ஸ்ரீராமநாம கானாமிர்தம் இசைவேள்ளி – 2014 விழா கடந்த (14-11-2014) வெள்ளிக்கிழமை நல்லூர் கம்பன் கோட்டம் ஸ்ரீ துர்க்கா மணிமன்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்னிந்திய இசைக்கலைஞர்களான சந்தான கோபாலன், பம்பாய் ஜெயஸ்ரீ, கத்ரி கோபால்நாத், ஏ.கன்னியாகுமரி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற இசைப்பேரரங்கில் தலைமையுரையினை யாழ்.பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை வழங்கினார். அத்தோடு பாடலினை நெய்வேலி ஆர்.சந்தான கோபாலனும் வயலின் ஜே.கே.திலீப்பும், மிருதங்கம் டெல்லி சாய்ராமமும்;, கஞ்சிரா அநிருத் ஆத்ரேயா ஆகியோரும் வழங்கினர்.

யுரோ ஸ்ரார் யு.கே.ஈ.லிமிட்டெட் அனுசரனையுடன் சனிக்கிழமை (15-11-2014) இடம்பெற்ற இசைப்பேரரங்கில் தலைமையுரையினை யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் வழங்கினார். அத்துடன் பாடலினை நாதவாணி ஸ்ரீமதி பம்பாய் ஜெயஸ்ரீயும், வயலின் ஜே.கே.திலீப், மிருதங்கம் டெல்லி சாய்ராம், கஞ்சிரா அநிருத் ஆத்ரேயா ஆகியோரும் வழங்கினர்.

பூபாலசிங்கம் புத்தகசாலை அனுசரனையுடன் ஞாயிற்றுக்கிழமை (16-11-2014) இடம்பெற்ற இசைப்பேரரங்கில் தலைமையுரையினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சக்ஸபோன் பத்மஸ்ரீ சுத்ரி கோபால்நாத், வயலின் கலைமாமணி ஸ்ரீமதி ஏ.கன்னியகுமரி, மிருதங்கம் டெல்லி சாய்ராம், கஞ்சிரா, அநிருத் ஆத்ரேயா ஆகியோரும் வழங்கியிருந்தனர்.

gallery

One Comment;

*

*

Top