பாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி

றொக்ஸன்
வடிவமைப்பு:  பெஸ்ரியன்

திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் செல்வி. சர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி இன்று சனிக்கிழமை (21.02.2015) காலை 10.00 மணிக்கு றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தில் மூத்த ஓவியரான ஆசை இராசையாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் தலைமையுரையினை திருமறைக்கலா மன்றத்தின் ஊடக இணைப்பாளர் கி.செல்மர் எமில் ஏற்றார். அத்துடன் பிரதம விருந்தினர் உரையினை மூத்த ஓவியர் ஆசை இராசையா வழங்கியதோடு சிறப்;பு விருந்தினர் உரையினை கிளிநொச்சி கல்விவலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப் பணிப்பாளர் சு.சிறீகுமரன் வழங்கினார். ஏற்புரையினை செல்வி சர்மிளா சந்திரதாசன் வழங்கினார்.

மூத்த ஓவியரான ஆசை இராசையா உரையாற்றுகையில்…………..

கலை ஆர்வம் கொண்;ட மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். இப்போதுதான் அவர்களிடத்தேயிருந்து புதிய ஆக்கத்திறன்கள் வெளிப்படும். அப்படியான ஒரு முயற்சியில்தான் சர்மலா சந்திரதாசனின் ஈடுபட்டுள்ளார். சர்மலா ஒரு மென்மையான மாணவி. அம்மாணவியின் முயற்சி, தொடர்ச்சியினால் தான் தான் படைத்த ஓவியங்களின் மூலம் பணப்பரில்களை பெற்றுக்கொண்டார். அவர் சுயதேடல் மற்றும் துறை சார்ந்த ஈடுபாடும் கொண்டவர்.

பல்கலைக் கழகங்கள் மற்றும் ஏனைய பட்டக் கற்கைகள் நிறுவனங்களில் உள்ள ஓவியத்துறையில் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்கள் அத்துறையிலே ஆர்வமின்pயே காணப்படுகின்றனர். இத்துறையில் பட்டத்தை பூர்த்தி செய்து விட்டு Nவுறு துறைகளில் வேலை செய்து பணத்தைச் சம்பாதிப்பதே அவர்களின் நோக்கமா உள்ளது.

ஓவியத்துறையினைப் படித்தால் எமது நாட்டில் வருமானம் பெற முடியாது என எண்ணி பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாகவும், அவர்களின் மனங்களையும் மாற்றி; Nவுறு துறைகளில் கல்வி கற்க அனுப்புகின்றார்கள். அவர்களும் வேறு வழியின்றி வருமான நோக்கில் வேறு துறைக்கு கல்வி கற்கச் செல்கின்றார்கள்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் எனது ஓவியங்கள் ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று வளர்ந்து வரும் சர்மலா சந்திரதாசன் போன்ற ஓவியர்களின் படைப்புகளுக்கும் எவ்வாறு வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நாம் யோசிக்கின்றோம். எமருது படைப்புக்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால் விற்பனை செய்து கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரை எந்த வகையில் எமது ஓவியங்களை பார்வையிட வைத்து விற்பனை செய்ய முடியும் என ஆலோசனை செய்து வந்தோம். அதன் முதல்கட்டமாக கொழும்பிலுள்ள ஓவியக் காட்சிக் கூடத்தைப் போன்று யாழ்பாணத்தில் ஒரு காட்சிக் கூடத்தை உருவாக்க வேண்டுமென எண்ணி ஆரம்பிக்கப்பட்டதுதான் திருமறைக்கலா மன்றத்தின் ஓவியக்கூடம். எங்களுக்கு என்ன தெரியுமே nதைச் செய்ய செய்ய வேண்டும். அந்த வகையில் சர்மிளா துறைசார் ஆளுமை கொண்டவராக விளங்குகிறார்.

சர்மிளா சந்திரதாசன் உரையாற்றுகையில்…

ஈழத்துப் பெண்கள் தொடர்பாக துன்பங்கள், அலவக்குரல்கள், உள்நாட்டு யுத்தப்பாதிப்புகள் என்பவை தொடர்பாக சில பெண்கள் வெளியிலே சொல்வதில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர நிலமைகளும் வெளிக்காட்டப்படுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்துக்காக தன்நிலைமாறி வாழ்ந்து வருகின்றனர். அதனையே நான் ஓவியமாக்கினேன்.

ஓவியங்களை நான் ஊடகமாகப் பயன்படுத்தி பெண்கள் தொடர்பான கருத்துக்களை வெளிக்காட்டியுள்ளேன். ஓவியங்கள் மூலம் கருத்தினை இலகுவாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்த முடியும். நான் இன்று இந்நிலைமையினை அடைவதற்கு எனக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூற விரும்புகிறேன். அந்தவகையில், ஆசிரியர் ரத்னகோபால், யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஆசை இராசையா, ரமணி மற்றும் எனது பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

sarmala santhirathasan art exhibition in jaffna nanilam

*

*

Top