வலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள்

யாழ்ப்பாண மக்களில் பலா் ஆதாித்த வலிகாமம் நீருக்கான போராட்டம்  குறித்து  பல்வேறு சா்ச்சைகள் எழுந்துள்ளன. சிலா் இதனை அரசியல் பிரச்சினையாக கருதுகிறாா்கள். சிலா் இதனை மக்கள் பிரச்சினையாக கருதுகிறாாகள். யாா் எவரோ இப்பிரச்சனைக்கு தீா்வு காண முணைகிறாா்கள். ஆனால் எப்படித் தீா்வு காண்பது என்று யாருக்கும் தொியவில்லை.  அதனைச் சம்மந்தப்பட்டவா்களும் தெளிவுபடுத்தவில்லை. உண்மையில் என்ன பிரச்சினை என்று எவருக்கும் விளங்கவில்லை. இது இப்படி இருகககையில்,  இப்பிரச்சினை தொடா்பாக பல்வேறு பட்ட முரண்பாட்டுக் கருத்துக்களை  முகநூலில் பலா் பதிவு செய்து வருகின்றனா்.

அப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சில பதிவுகள்:

– சிவரூபன் தங்கவேல்

பலபேர் ஆதரித்த யாழ்-வலிகாமத்திற்கான நீருக்கான போராட்டத்தை.. இவர்கள் நீர்த்துப்போகச் செய்துள்ளார்கள்…

“யாழ்ப்பணத்தில் இரண்டு இலட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கான இறுதிப்போராட்டம்!” – முதலில் கோசமே பிழை… இறுதிப்போராட்டம் எந்த அடிப்படையில் இதை இவர்கள் இறுதிப்போராட்டம் என்றார்கள்?

முடிவு எட்டப்படும் என்றா..? முற்கூட்டியே முடிவை எடுத்துவிட்டுதான் போராட வந்தார்களா? வேறு எவரும் எட்டப்படும் முடிவில் உடன்படாமல் வேறு எக்காலத்திலும் போராடக்கூடாது என்றா? மேற்படி பிரச்சனை தொடர்பில் மேலே ஒருங்கிணைந்தவர்கள் தவிர வேறு எவருக்கும் போராடும் உரிமை இல்லை என்றா?

சாாரணமாக எவரும்.. எங்கும்.. (பொது இடத்தில்..) உண்ணாவிரதமிருக்க முடியுமா? நல்லூர் கந்தசாமி கோவில் எல்லைக்குள்.. அதை யார் அனுமதித்தார்கள்? மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடுத்தவர்கள் யார்?
சுன்னாகத்திலே.. உண்ணாவிரதமிருந்தவர்கள் யார்? நேற்றைய போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் யார்?
நேற்று உண்ணாவிரதமிருந்தவர்கள் யார்? உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் யார்?

போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் (உயர் தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் தவிர) எவ்வளவுபேர்?

போராட்டத்தில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட பிரதேச பொதுமக்கள் எவ்வளவுபேர்? போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் யார்?. அல்லது எவர்?. உண்ணாவிரதத்தில் பங்கு பற்றினர்? எழுத்துமூல உறுதி மொழிக்காக முதலமைச்சர் காலையிலிருந்து முயற்சித்துக் கொண்டிருக்க.. இரவு அவரது வாய்மூல 5 நாள் அவகாசத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்காத.. இவர்கள்.. நேற்று.. முதலமைச்சர் அலுவலகம்.. அரச அதிபர் பணிமனை.. ஆளுநர் அலுவலகம்.. எல்லாம் சென்ற இவர்கள்… இன்றுதான் வந்த அதிகாரிகளின்.. வாய்மூல உறுதிப்பாட்டையும்.. 7 நாள் அவகாசத்தையும் ஏற்றுக்கொண்டது எவ்வாறு?

தங்களிற்காக முதலமைச்சர் எழுத்து மூல உறுதி தயாரிப்பது அறிந்தும்.. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் பேரம்பேசல்களில் ஈடுபட்டவாறும்… வேறு ஒரு தரப்பினை இடையில் நுழையவிட்டும்… முன்னரே பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவருக்கு எதுவித பதிலும் வழங்காது.. சந்தர்ப்பவாத… வியாபார ரீதியான முறையில் போரட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது ஏன்?

– ஸ் ரீபன் சஞ்சிகள்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பிரதேச கிணறுகளில் கழிவு ஒயில் பரவி வருகின்றது. இவ்வாறு கழிவு ஒயில் கலந்த நீரை அருந்துவதால் நீண்ட கால உடல் உபாதைகள் ஏற்படும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து தூயநீருக்கான தீர்வை வேண்டி மக்களால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று நல்லூர் முன்றலில் ஐந்து இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முற்றுமுழுதாக ‘மக்களால் மக்களுக்காக’ நடத்தப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் ‘அரசியல்வாதிகளுக்கு அனுமதியில்லை’ என்ற அறிவித்தலை ஏற்பாட்டாளர்கள் ஏலவே விடுத்திருந்தனர். இதன்பொருட்டு எந்த அரசியல்வாதிகளும் இந்த போராட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்கவந்த அரசாங்க அதிபரோடு ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த சுந்தரம் டிவகலாலா மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அரச அதிபரோடு வந்த காரணத்தினால் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பினும் ‘அரசியல்வாதிகளுக்கு அனுமதியில்லை’ என்ற போராட்டத்தின் கொள்கைப்படி இவர்களை அனுமதித்தது தவறே. இந்த நிகழ்வை முன்வைத்து சில பிற்ப்போக்கு தனமான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் விசுவாசிகள் மற்றும் ஊடகங்களால் ஈ.பி.டி.பி கட்சியினரின் பின்னணியில் இயங்கும் அரசியல் ரீதியிலான போராட்டம் இது என்ற வகையிலான தவறான பிரச்சாரங்கள் மிகத் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்பட்டன. போராட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் முயற்சியில் திட்டமிட்டே இந்த பரப்புரைகள் இடம்பெற்றுவந்ததை காணக்கூடியதாக இருந்தது.

ஆய்வுகளின்படி நீரை பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் இல்லை என்ற அறிக்கையொன்றை வடமாகாண சபை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அதன்படி ஒருபகுதி மக்கள் ஒயில் கலந்த நீரை பயன்படுத்தவும் ஆரம்பித்திருந்தனர். நேற்றைய போராட்டத்தில் ஆய்வறிக்கையை எமக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்ததால், வடமாகான சபையால் ஓர் அறிக்கை கையளிக்கப் பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, அந்த நீரில் நைத்திரேற்று, கிறீஸ், ஒயில் போன்றன இருக்கின்றது. அந்த நீர் குடிக்க தகுந்தது அல்ல என குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களுக்கு சரியான தீர்வை வழங்கவேண்டிய மாகாண சபை இத்தகைய கேலிக்கூத்துக்களுக்கு இடமளித்துக் கொண்டிருந்தால், பாதிக்கப்படும் மக்களுக்கு பதில் சொல்வது யார்? இவர்களது முன்னைய அறிக்கையை நம்பி நீரை உபயோகித்த மக்களுக்கு பொறுப்பு கூறப்போவது யார்?

போராட்டக்காரர்களை சந்தித்த முதலமைச்சரின் முதல் கேள்வியே ‘என்ன தம்பி தண்ணி குடிக்காம இருக்கிறீங்களாம்’ என்று கேலியாய் எழுந்தது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போராட்டத்தின் நோக்கம் பற்றி முதலமைச்சரிடம் எடுத்துரைத்தபோது அவருக்கு போராட்டம் குறித்தோ, நீர்ப்பிரச்சினை குறித்தோ தெளிவு இருக்கவில்லை. பல விசயங்களை புதிதாகவே கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். ஒரு முதலமைச்சர் மக்களின் பிரச்சினை குறித்தோ, போராட்டம் குறித்தோ தெரிந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு வேதனை. ஆனால் இந்த நிகழ்வை திரிபுபடுத்திய ஊடகங்கள், போராட்டக்காரர்களால் முதலமைச்சர் அவமதிக்கப்பட்டதாக பொய்யானதொரு செய்தியை பிரசுரித்தன.

நீர்ப்பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள் அரசியல் தலையீடுகள் காரணமாக திசைதிருப்பப்பட்டதன் விளைவாக, அரசியல்வாதிகளை அனுமதிக்காமல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் சில தேசியவாத அழுத்தங்களையும் சந்தித்திருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். இருப்பினும் போராட்டம் இலக்கை நோக்கி அர்ப்பணிப்போடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. எமக்கு ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று வடமாகாண ஆளுநரும், அரச அதிபரும் இணைந்து கேட்டுக்கொண்டதன்படி போராட்டம் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. ‘ஒரு வார காலத்தில் எமக்கு சரியான தீர்வை தராத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும்’ என்ற செய்தியை போராட்டக்காரர்கள் அரச அதிபரிடமும், ஆளுனரிடமும் முன்வைத்திருக்கிறார்கள். ஆக, போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை. தீர்வுக்கான கால அவகாசமொன்றை வழங்கியிருக்கிறது. அவ்வளவே.

இதொருபுறமிருக்க தமிழ்த்தேசிய முகமூடிக்குள் நுழைந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் வடமாகாண சபையின் கூத்துக்களை நியாயப்படுத்த முயன்ற அதேவேளை எதிர்க்கருத்துக்களை முன் வைப்பவர்களை தமிழ்த்தேசிய விரோதிகளாக முத்திரை குத்தி ஒதுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தின் உண்மை நிலையை மழுப்பி முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த இந்த ஊடகங்களின் செய்திகளையே வேதவாக்காக எடுத்துக் கொண்ட சில இணைய பதிவர்களும், அதையே பின்பற்றி உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்திருந்தனர்.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்கவும். அறிக்கை வரும்வரை நீரை பயன்படுத்துவதை தவிருங்கள். ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் முதலாளித்துவ கைக்கூலிகளின் திசைதிருப்பல்களுக்கு இடம்கொடாதீர்கள்.

*

*

Top