கலாநிதி ஶ்ரீ. தர்ஷனனுக்கு ஜனாதிபதியின் தேசிய விருது

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் அறிவிக்கப்பட்ட, தேசிய விருதான ‘தேஷபந்து’, இசைத்துறையில் சிறந்த சேவையை நாட்டுக்கு வழங்கியமையை கௌரவித்து, ஜனாதிபதியின் பிரதிநிதியான, நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய விஜயதாஸ ராஜபக்சவால், கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் 21.06.2015 அன்று, யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஶ்ரீ. தர்ஷனனுக்கு வழங்கப்பட்டது. இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின் ஸ்தாபகரும், செயலாளரும், ஜேர்மனிய சட்ட ஆலோசகருமாகிய தேஷமான்ய MTS. ராமச்சந்திரனின் பரிந்துரையிலும், ஏற்பாட்டிலும் இவ்விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

வைபவத்தில் சிறப்பு இசை நிகழ்வாக, யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையினரின் கர்நாடக இசையரங்கு இடம்பெற்றது. துறைத் தலைவர் கலாநிதி. ஶ்ரீ. தர்ஷனன், விரிவுரையாளர்கள் மு.விஜயகுமாரி, வி.வினோஜா மற்றும் மாணவர்கள் எஸ்.மதுஜா, கே.நிஷேதனா, எஸ்.அனுச்சித்ரா, என்.சங்கீதவாணி ஆகியோர் இச் சிறப்பு இசையரங்கை நிகழ்த்திச் சிறப்பித்தனர். மேலும் பல கலை நிகழ்வுகளும், சான்றிதழ் வழங்குதலும், கலைஞர் கௌரவிப்பு விருது வழங்கல்களும் இடம்பெற்றன. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து இவ்வைபவத்தில் கலந்துகொண்ட 500 பேருட்பட மண்டபம் நிறைந்த அபிமானிகள் இவ்வைபவத்துக்குப் பெருமை சேர்த்தார்கள்.

கலாநிதி ஶ்ரீ. தர்ஷனனுக்கு ஜனாதிபதியின் தேசிய விருது (1)

கலாநிதி ஶ்ரீ. தர்ஷனனுக்கு ஜனாதிபதியின் தேசிய விருது (2)

கலாநிதி ஶ்ரீ. தர்ஷனனுக்கு ஜனாதிபதியின் தேசிய விருது (3)

*

*

Top