‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா

கலாநிதி ஶ்ரீ. தர்ஷனன் எழுதிய, ‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ எனும் நூல் அறிமுக விழா, 22.07.2015 நேற்று புதன்கிழமை மட்டக்களப்புப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் விமரிசையாக நடைபெற்றது.

பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸின்  தலைமையிலும், பணிப்பிலும் சிரேஸ்ட உதவிப்பதிவாளர் ஏ.ஜே.கிறிஸ்ரியின்  அயராத முயற்சியிலும், பேராசிரியர். சி. மௌனகுருவின் அறிமுக உரையுடனும், கலாநிதி பால கைலாசநாதக் குருக்களின் நிறைவுரையுடனும் விழா சிறப்புப்பெற்றது. நிகழ்வில் இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நூலாசிரியருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனா்.

பேராசிரியர் மௌனகுரு தனது உரையில், ‘இந்நூல் காலத்தின் தேவையாகும். கலாநிதி தர்ஷனன், தன்னைப் போலவே தான் எழுதிய நூலையும் பழைமை பாதியும்-புதுமை பாதியுமாகப் படைத்துள்ளமையானது, அடிப்படைவாதிகளின் மகிழ்ச்சியைச் சம்பதிக்காது விட்டிருந்தால், அது கவலைக்குரியது. என்னைப் பொறுத்தவரை இன்றைய கலைஞனானவன் இவ்வாறுதான் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் எனும் பொய்யாமொழிக்கிணங்க கலாநிதி தர்ஷனன், வித்தையிலே எவ்வளவு தான் உயர்ந்தாலும் மாணவனை பண்புகள் உள்ள மனிதனாக்குவதே இசைக்கல்வியின் இறுதி நோக்கு என்று தனது சாராம்சத்தை நூலில் நிறுவியுள்ளமை என்னை மிகவும் கவர்ந்தது. மற்றும் சரியை-கிரியை-யோகம்-ஞானம் ஆகியவற்றைப் பல்கலைக்கழக இசைக் கல்வியின் 4 வருடங்களுடனும் ஒப்பீட்டாராய்ந்தமையும் புதிய சிந்தனையாக என்னைக் கவர்ந்தது’ என்றார்.

'நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி' நூல் அறிமுகவிழா (1)

'நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி' நூல் அறிமுகவிழா (5)

'நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி' நூல் அறிமுகவிழா (2) 'நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி' நூல் அறிமுகவிழா (3) 'நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி' நூல் அறிமுகவிழா (4)

*

*

Top