முருகையாவின் ‘சுரங்களால் ஓர் அர்ச்சனை’ இசை இறுவெட்டு வெளியீடு

அளவையூர் சி. முருகையாவின் ‘சுரங்களால் ஓர் அர்ச்சனை’ இசை இறுவெட்டு வெளியீட்டு விழா நிகழ்வு உடுவில் மகளீர் கல்லூரி ஆசிரியர் சைவசித்தாந்த பண்டிதர் ப.சாந்தகுமார் தலைமையில் 23.08.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் சிறப்பு அதிதிகளாக அளவெட்டி கிராமத்தின் கிராம அலுவலர்கள் எஸ்.கணேசதாசன் மலாதேவி மதிவதணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்விற்க்கான வரவேற்புரையினை செல்வி ரஜிதா இராஜகிளி வழங்கினார்.. வாழ்த்துரைகளினை அளவெட்டி மகாஜன சபைத்தலைவர் வை.சுப்பிரமணியம், கலை இலக்கிய பேரவைத்தலைவர் சட்டத்தரணி சோ.தேவராஜா, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியரும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உபசெயலாளருமாகிய சைவப்புலவர் பண்டிதர் எஸ்.ரி.குமரன் ஆகியோர் வழங்கினார்கள்.

வெளியீட்டுரையினை ஆசிரியரும் எழுத்தாளருமாகிய கை.சரவணன், நயப்புரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகம், சிறப்புரைகளினை கிராம சேவை உத்தியோகத்தர்கள் திருமதி மலாதேவி மதிவதணன், க.கணேசதாஸ் ஏற்புரையினை பாடலாசிரியர் அளவையூர் சி.முருகையா ஆகியோர் வழங்கினார்கள்..

இவ்இசை இறுவெட்டிற்கான இசையினை நுண்கலைமாணி சி.ரஜீவன் வழங்கியுள்ளார். பாடல்களினை எஸ்.ஜி.சாந்தன், ம.தயாபரன், ஜீவந்தினி லம்பொதரன், த.கெங்காதரன், ச.கம்சத்வனி கி.திருமாறன் , சி.வரதன் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

'சுரங்களால் ஓர் அர்ச்சனை' இசை இறுவெட்ட வெளியீடு (1) 'சுரங்களால் ஓர் அர்ச்சனை' இசை இறுவெட்ட வெளியீடு (2) 'சுரங்களால் ஓர் அர்ச்சனை' இசை இறுவெட்ட வெளியீடு (3)

*

*

Top