பிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?

காதலை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து சுவாரசியமான திரைக்கதையுடன்  வெளிவந்துள்ள குறும்படம் பிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?.

நிர்மலனின்  தயாரிப்பில் எஸ்.ராஜ் இயக்கத்தில்  காண்டீபன், ஷனா, நில்ருக்சன் நடிப்பில்,வெளியாகி இருக்கும் இக்குறும்படத்திற்கு மதீசன் இசையமைத்துள்ளார்.

இக்குறும்படத்தில் தொிவு செய்யப்பட்ட அனைத்து காதாப்பாத்திரங்களின் நடிப்பு அருமையாக அமைந்திருந்தது. அதில் கதையின் நாயகனின் அப்பாவாக வருவாின் நடிப்பு அபாரம். படத்தொகுப்பு அருமை. குறும்படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை திரைக்கதை விறுவிறுப்பாகவும் காட்சிக் குழப்பமின்றி நகா்கிறது. ஆரம்பத்தில் வரும் ஒவ்வொரு காட்சி  நகா்வுக்கும்  கடைசியில் ஒரு தொடா்பை  வைத்து கதையை தெளிவாக  நகர்த்தியுள்ளார்.

கதையில் நாயகன் எப்படியாவது நாயகியை (காதலி) தியேட்டருக்கு படம் பாா்க்க கூட்டிட்டு போக வேனும் என்று நினைக்கிறாா். ஏதேதோ பேசி ஒருவழியாக காதலியை தியேட்டருக்கு கூட்டிட்டு போக சம்மதம் வாங்குகிறான். அதன்பிறகு அவன் தியேட்டருக்கு போனானா இல்லை என்ன செய்தான் என்பதை மிகவும் சுவாரசியாமாக நகைச்சுவை கலந்து  சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜ்.

*

*

Top