மாவடி நாதம் – வெளியீட்டு விழா

மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலுக்கென பக்திப்பாமாலை ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாவடி நாதம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த இசை இறுவட்டின் வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியர் க.கந்தசாமி தலைமை தாங்கினார். தென்மராட்சி கல்வி வலய முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தமுர்த்தி பிரதம விருந்தினராகவும் சாவகச்சேரி நகரசபை ஆணையாளர் சண்முகதாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். மாவடி நாதத்திற்கான வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ஆற்றினார். வரணி சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் வை.விஜயகுமாரன் நிகழ்வுகளைத் தொகுத்தளித்தார்.

11891086_10154125226740744_4679949351002441112_n

*

*

Top