வடஇலங்கைச் சங்கீத சபையின் ஓகஸ்ட் மாதா கலை நிகழ்ச்சிகள்

வடஇலங்கைச் சங்கீத சபையின் ஏற்பாட்டில் மாதாந்த கலை நிகழ்ச்சி (2015) 29.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு வடஇலங்கைச் சங்கீத சபையின் தற்பானந்தன் கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விலே முதல் நிகழ்வாக இசை அரங்கு நடைபெற்றது. இதில் கீதவாஹினி இசைக்கல்லூரி மாணவர்களான, செல்வி.பிறிஸில்லா ஜோர்ஜ்;, திருமதி.அனுஷா யதுகரன், செல்வி.மேரி பிரியந்தினி யேசுதாசன், செல்வி.மதிவதனி குசேலராஜா,குரலிசை வழங்க அணிசை கலைஞர்களாக வயலின் – திருமதி. ருஷாந்தி பிரதீபன், மிருதங்கம் – செல்வம் கண்ணதாஸ், இசை நிலவன் ஆகியோர்; வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் பாட்டு – திருமதி.ஹம்சத்வனி பிரசாந்சர்மா, வயலின் – அ.ஜெயராம,; மிருதங்கம் – க.கண்ணதாசன், முகர்சிங் – பு.வசந் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இரண்டாவது நிகழ்வாக இணுவில் கந்தசாமி கோவில் இளந்தொண்டர் சபையினர் வழங்கிய ‘பக்த நந்தனார்’ இசை நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அணிசை கலைஞர்களாக பாட்டு – எஸ். துஷ்யந்தன் , நட்டுவாங்கம்– திருமதி.தமிழினி ஜோஷப், வயலின் – ப.சியாம்மகிருஷ்ணா, மிருதங்கம் – க.நந்தகுமார் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். நிகழ்விலே மாணாக்கர்கள், விரிவுரையாளர்கள், கலை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடஇலங்கைச் சங்கீத சபையின் ஓகஸ்ட் மாதா கலை நிகழ்ச்சிகள் (1)

வடஇலங்கைச் சங்கீத சபையின் ஓகஸ்ட் மாதா கலை நிகழ்ச்சிகள் (2) வடஇலங்கைச் சங்கீத சபையின் ஓகஸ்ட் மாதா கலை நிகழ்ச்சிகள் (3) வடஇலங்கைச் சங்கீத சபையின் ஓகஸ்ட் மாதா கலை நிகழ்ச்சிகள் (4) வடஇலங்கைச் சங்கீத சபையின் ஓகஸ்ட் மாதா கலை நிகழ்ச்சிகள் (5)

*

*

Top