சமையலறையில் கல்லறை: விசமாகிய உணவுகள் பாகம் – 5

Barack Obama

 – டேவிற் பிரவீன்

இனி மரபணு பொறியியல் (genetic engineering) மூலம் தயாரிக்கப்படும் விவசாய உணவுப் பொருட்களை GM பயிர்கள் என்று அழைக்கலாம். மரபணு பொறியியல் (genetic engineering)மூலம் தயாரிக்கப்படும் பயிர்களுக்கு இன்றைய அளவில் மூன்று முக்கிய குணங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அவை

1.பயிர்கள் தாமாகவே களைகளை கொல்லும் குணம்.

2.இரண்டாவது களைகளை கொல்ல அடிக்கப்படும் களைக்கொல்லி பூச்சி மருந்துகளால் பாதிக்கப் படாத குணம்.

3. மற்ற உயிரினத்தின் சிறப்பு இயல்புகளின் ஒன்றைப் பெறும் குணம்.

GM பயிர்களை உலகளில் உற்பத்தி செய்து லாபம்பெறும் பெரு மூலதன நிறுவனமான மொன்சாண்டோ (Monsanto) இத்தகைய பயிர்களை ரெடி ரவுண்ட்அப் (Ready Roundup) பயிர்கள் என்று அழைக்கிறது. மொன்சாண்டோ (Monsanto)வின் சோதனைக் கூடத்தில் நாம் இதற்கு முன்பு பார்த்த அறிவியல் முறைகள் படி தயாராகும் GM பயிர்களை நிலத்தில் விதைத்தால் அது தன்னுடன் எந்த வகையான களைகளையும் வளர விடாது. மேலும் களைகளை கொல்லவும் மற்ற பூச்சிக்களைக் கொல்லவும் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்திற்கும் இவைகள் உள்ளாகாது. நீண்ட நாட்கள் பழுதாகாமல் இருக்கும் பண்பை இந்தப் பயிர்களின் மூலம் விளையும் உணவுப் பொருட்களுக்கு கொடுக்க மற்ற உயிரினங்களின் (மீன், தவளை, மனிதன்) மரபணுக்கள் இந்த பயிர்களின் மரபணுவிற்குள் செலுத்தப்பட்டிருக்கும்.

ரெடி ரவுண்ட்அப் (Ready Roundup) பயிர்களுக்கு இந்த இயல்புகளைத் தர பயன்படுத்தப்படும் பாக்டீரியாவின் பெயர் Bacillus thuringiensis சுருக்கமாக BT என்பார்கள். இந்த பயிர்கள், இவைகள் விளைவிக்கப்படும் பகுதியின் உயிரியல் சமநிலையை பாதிக்க கூடியவைகள். எப்படி என்றால் இந்த பயிர்களும் மற்ற இயற்க்கை பயிர் வகைகளைப் போல மகரந்த சேர்க்கையில் ஈடுபடக் கூடியவைகள்.

இயற்கையின் மகரந்த சேர்க்கை என்பது ஒரே வகை அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்த பயிர்களினிடையே தான் நடைப்பெறும். அதாவது சோளத்தின் மகரந்தம் சோளவகை பயிர் குடும்பத்தோடு மட்டும்தான் மகரந்த சேர்க்கையில் ஈடுபடும். ஆனால் இந்த GM பயிர்கள் தன் குடும்பத்தை சேர்ந்த பயிரோடு சேர்த்து பிற உயிரினங்களிலும் பாதிப்பை ஏற்ப்படுத்தும்.

அதற்கு காரணம் இவைகள் தவளை, மீன், பன்றி போன்ற பயிர் குடும்பத்தை சேராத உயிரினங்களின் மரபணுவிற்கும் நெல், கோதுமை, சோளம் போன்ற பயிர் குடும்பத்தை சேர்ந்த உயிரனத்திற்கும் பிறந்தவைகள். எளிமையாக சொல்வதென்றால் தவளை தக்காளிச் செடியுடன் உடலுறவுக் கொண்டு அதன் மூலம் ஒரு தக்காளி பிறப்பதைப் போன்றது. இந்த தக்காளிப் பயிர் செடியில் தவளையின் மரபணுவும் இருப்பதால் இதன் மகரந்தமானது காற்றில் பரவி சுற்று வட்டாரத்தில் இருக்கும் தவளைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் தவளைகளின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மரபணு மாற்றம் காரணமாக அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் தவளைகளுக்குப் பிறக்கும் தவளை குஞ்சு தக்காளி பாதி தவளை பாதி என்றோ தக்காளி உடம்பில் தவளையின் தலை கொண்டது என்றோ தவளையின் உடம்பில் தக்காளிப் போன்ற தலை என்றோ எப்படிவேண்டுமானாலும் பிறக்கலாம்.

இது இத்தோடு நிற்காது தக்காளி செடி பயிர் குடும்பத்தை சேர்ந்தது என்பதால் தவளையின் மரபணுவைக் கொண்டிருக்கும் அது மற்ற செடியினங்களோடும் மகரந்த சேர்க்கையில் ஈடுபடும். இதனால் பாதிக்கப்படும் மற்ற செடி இனங்களும் தவளையின் இயல்புகளைக் கொண்ட காய்களை காய்க்கத் தொடங்கிவிடும். இப்படி GM பயிர்கள் சுற்றுச் சூழலின் சம நிலையில் பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். தவளை தக்காளிச் செடி என்பது ஒரு உதாரணம் மட்டுமே.

மனித மற்றும் பிற விலங்கினங்களின் மரபணு கலக்கப்பட பயிர் வகைகள் சுற்றுச் சூழலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்ப்படுத்தக் கூடும் என்பதை நீங்களே இந்த தவளைத் தக்காளி செடி உதாரணத்தின் மூலம் அனுமானித்துக் கொள்ளுங்கள். இன்றைய அளவில் இப்படி GM பயிர்கள் மற்ற உயிரனங்களில் ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களை தடுக்கவோ, பாதிப்பு ஏற்பட்ட பின் சரி செய்யவோ எத்தகைய அறிவியல் வழி முறைகளும் கிடையாது.

இதன் அறிகுறிகள் ஏற்கனவே மரபணு மாற்றப் பட்ட சோளப் பயிர்கள் விளையும் பகுதிகளில் தெரியத் தொடங்கி விட்டன. இந்த மரபணு மாற்றப்பட்ட சோளப் பயிர்கள் தாங்கள் விளையும் வயல் வெளிகளுக்கு அருகே விளையும் இயற்கை சோளப் பயிர்களையும் மகரந்த சேர்க்கையின் மூலம் பாதிக்கத் தொடங்கி விட்டது.

ஆனால் மொன்சாண்டோ (Monsanto) இது தொடர்பாகப் பச்சையாக பொய் சொல்லியபடி இருக்கிறது.

இது குறித்து மேலும் அடுத்த தொடரில்………

One Comment;

*

*

Top