சமையலறையில் கல்லறை: விசமாகிய உணவுகள் பாகம் – 7

 – டேவிற் பிரவீன்

இனி இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மூலம் விளையும் உணவுப் பொருட்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படப்போகும் பேரழிவு பாதிப்புகளைக் குறித்துப் பார்க்கலாம். மரபணு மாற்றப் பட்ட தொழில் நுட்பத்தின் மூலம் தயாரான உணவுப் பொருட்களை சோதனைக் கூடங்களில் எலிகளுக்கும் பன்றிகளுக்கும் கொடுத்து பரிசோதனை செய்ததில் கிடைத்திருக்கும் பரிசோதனை முடிவுகள் இவை:

1.தானாகவே பூச்சிக் கொல்லி சக்தியைப் பெறும்படி மரபணு மாற்றப்பட்ட உருளைக்கிழங்கை எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததின் முடிவுகளாக கிடைத்திருப்பது உணவுக் குழாயில் கேன்சர் செல்களின் வளர்ச்சி, கல்லீரலில் செல் சிதைவு, கணையம் மற்றும் குடல்களின் அளவுக்கு மீறிய பெருக்கம், மூளை கல்லீரல் விதைகளின் அளவுக்கு மீறிய பெருக்கும் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் குறைதல்.

2.GM FlavrSavr தக்காளி (தக்காளியின் பெயரே இதுதான்) என்ற மரபணு மாற்றப்பட்ட தக்காளியை 40 எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததின் முடிவு 20 எலிகளுக்கு வயிற்றில் இரத்தம் கசியும் குடற் புண்ணும், 7 எலிகள் இறந்தும் போய்விட்டன.

3.Monsanto-வின் MON 863 Bt என்கிற மரபணு மாற்றப்பட்ட சோளத்தை எலிகளுக்கு கொடுத்ததில் இரத்த அணுக்களில் மாற்றமும், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் மாறுதல்களும் கண்டறியப்பட்டன.

4.Bt-cotton எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விளைந்த விளைநிலங்களில் மேய்ந்த ஆட்டு மந்தைகளில் 25% அளவிற்கு உயிரிழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது. இது  இந்திய நாட்டில் நடந்தேறியது.

5.வடக்கு அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட சோள பயிர்களை பன்றிகளுக்கு தீவனமாக கொடுத்து வந்ததில் கிடைத்த முடிவுகள், பன்றிகளின் கருவுரும் சதவிகிதத்தில் வீழ்ச்சி, பொய் கருமுட்டைகள், ஆண் பெண் பன்றிகளின் இனப்பெருக்க சக்தி குறைபாடு மற்றும் வெறும் பன்னீர் குட பிரசவம். இதே பிரச்சனை மாடுகளிலும் காணப்பட்டிருக்கிறது.

6.Bt 176 என்கிற மரபணு மாற்றப்பட்ட சோளப்பயிரை தீவனமாக கொடுத்ததில் மூன்று கறவை மாடுகள் இறந்திருக்கின்றன இது ஜெர்மனியில் நடந்த ஆராய்ச்சி.

7.மரபணு மாற்றப்பட்ட மொச்சை உணவை எலிகளுக்கு கொடுத்துப் பார்த்ததில் கிடைத்த முடிவுகள், கல்லீரல் செல்களில் மாற்றம், அதிக வளர்சிதைமாற்ற விகிதம், மிக முக்கியமான alpha-amylase எனப்படும் செறிமான திரவத்தின் (digestive enzyme) சுரப்பு விகிதத்தில் வீழ்ச்சி 77% அளவிற்கு மற்றும் கணயத்தில் மாற்றங்கள்.

8.GM canola என்கிற மரபணு மாற்றப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எலிகளுக்கு கொடுத்த சோதித்ததின் முடிவு, 12-16% கல்லீரல் அளவில் பெருக்கும்.

9.Chardon LL GM என்கிற மரபணு மாற்றப்பட்ட சோளத்தை கோழிகளுக்கு தீவனமாக கொடுத்த சோதனையின் முடிவு, 7% கோழிகளின் மரணம். கோழிகளின் மரணத்திற்கு காரணம் அதிகப்படியான உடல் எடை மற்றும் பெருந்தீனி பழக்கம்.

10.மரபணு மாற்றப்பட்ட பட்டாணியை எலிகளுக்கு கொடுத்து சோதித்ததில் கிடைத்த முடிவு, அபாயகரமான நோய் எதிர்ப்புத் திறன்.

இது குறித்து மேலும் அடுத்த தொடரில்…

*

*

Top