ஆறுபடை ஆறுமுகன் அருட்செயல் நாட்டியம்

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நல்லூர் முருகன் உச்சவகால தெய்வீக இசையரங்கு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுகளில் ஒன்றான ஆறுபடை ஆறுமுகன் அருட்செயல் நாட்டியம் 01.09.2015 அன்று செவ்வாய்கிழமை நல்லூர் ஸ்ரீதுர்க்கா மணிமன்டபத்தில் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்விலே நாட்டியகலாகேந்திரா இயக்குநர் கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரா மற்றும் துணை இயக்குநர் முதுதத்துவமாணி திருமதி துஸ்யந்தி சுகுணன் ஆகியோரின் நாட்டிய ஆக்கத்தில் அரங்கேற்றப்பட்டது.

இயக்குநர் நல்லைக் காலமந்திர் கவின்கலை இயல்நிறைஞர் திருமதி.அ.துஸாந்தி சுகிர்தராஜின் நட்டுவாங்கத்தில் விஞ்ஞானமாணி அமிர்தலோஜனனின் இசையமைப்புடன் குரலிசை அணிசெய்ய இலயஞானவாரிதி கலாநிதி மகேந்திரன் மிருதங்கம் இசைக்க கலைஞானச்சுடர் அ.ஜெயராமன் வயலினிசை வழங்க இசைக்கலைமாணி எஸ்.இரஜீவன் ஓர்கன் இசை மீட்ட நாட்டிய கலாகேந்திரா, நல்லைக்கலாமந்திர் மாணவிகள் இணைந்து ஆறுபடை ஆறுமுகன் அருட்செயல் நாட்டியம் அர்ப்பணமாகியது.

இவ்வாற்றுகையில் முதுதத்துவமாணி திருமதி துஸ்யந்தி சுகுணன், நுண்கலைமாணிகளான செல்வி. அபிராமி தட்சணாமூர்த்தி, செல்வி.சிவதர்சினி கந்தவேல், செல்வி.நீருஜா நாகேந்திரகுமார், செல்வி.கஜனி இராஜரெட்ணம் மற்றும் செல்வி.பபிதா செல்வகுமாரன், செல்வி.விஜயந்தி சுகுணன், செல்வி.ஆத்மிகா சுகிர்தராஜ், செல்வி.சுகர்ந்தர்ஜா சுகிர்தராஜ் ஆகியோர் பங்குபற்றிருந்தனா்.

ஆறுபடை ஆறுமுகன் அருட்செயல் நாட்டியம்

*

*

Top