நந்தினி சேவியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Barack Obama

- சுப்ரமணியம் குனேஸ்வரன்

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கிழமை 10.09.2015 கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

17வது கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் கொடகே நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே விருதினை வழங்கிக் கௌரவித்தார்.

நந்தினி சேவியர் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பங்களித்து வருபவர். அவரின் படைப்புக்களை ஒன்று சேர்த்து (அவர் எழுதியவற்றில் தொலைத்து விட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் தவிர்ந்த) அண்மையில் விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற காத்திரமான தொகுப்பினையும் வெளியிட்டிருந்தது.

நந்தினி சேவியர் தொடர்ந்தும் தமது எழுத்துலக அனுபவங்களை மேலும் முழுமூச்சுடன் தமிழ் இலக்கிய உலகிற்கு தருவதற்கு இந்த விருது ஒர் உந்துதலாக அமைந்துள்ளளது. 

*

*

Top