மழை மட்டுமா அழகு…

Barack Obama

- வேலணையூர் தாஸ்

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருக்கிறது. பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பக்கம் பாராட்டுக்களும் விருந்துகளுமாய் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மறுபக்கம் இலக்கை அடைய முடியாமல் போன பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

புலமைப்பரிசில் பரீட்சை ஆறாம் ஆண்டுக்கு தேசிய பாடசாலைகளில் மாணவரை சேர்ப்பதற்காகவும் வறிய மாணவர்க்கு உதவியளிப்பதற்காகவும் நடாத்தப்படுகின்ற போட்டிப்பரீட்சை. ஒரு குறித்த அளவு மாணவர்களையே தேசிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள முடியும் என்பதால் மிகுதிப்பேரை விலக்கி விடவே நடாத்தப்படுகிறதெனவும் கொள்ள வேண்டும் தவிர அவர்கள் புலமையை சோதிப்பதற்கானதென கருத முடியாதுள்ளது.

இன்று என்னிடம் சிகிச்சைக்கு ஒரு தாயார் வந்தார் மிகக்கவலையாக இருந்தார், தலை விறைப்பதாக சொன்னார். ஏன் கவலையாக இருக்கிறீர்கள் என கேட்டேன். தனது மகள் புலமைப்பரிசில் பரீட்சை எடுத்தாவாம் நுாற்றிநாற்பது புள்ளிகளாம் பெயிலாகி விட்டாளே அவள் எதிர்காலம் என்னவாகுமென யோசிக்கிறேன் என்றார். இதை சொல்லும் போது கண்கள் கலங்கி குரல் உடைந்து வந்தது. அந்த பிள்ளை நுாற்றி நாற்பது புள்ளிகள் என்றால் ஒரு பாடதிற்கு எழுபது புள்ளிகள் எடுத்திருகக்கிறது. எனவே அவள் பாஸ் தானே எப்படி அவளை புலமையற்றவளாக கருதலாம் பெரிய பாடசாலை வாய்ப்பு மட்டும் தவறியிருக்கிறது என விளங்கப்படுத்தினேன்.

எல்லேராலும் இரண்டு பாடங்களிலும் எழுபத்தைக்குமேல் மாக்ஸ் எடுப்பது சாத்தியமில்லைத் தானே அத்தோடு கலைப் பாடங்களை அதிகம் விரும்புகிற பிள்ளைகள் கணிதபாடத்தில் குறைவான மதிப்பெண்களை பெறுகிறார்கள். குறிப்பிட்ட மாணவர்களையே தெரிவு செய்ய வேண்டி இருப்பதால் வெட்டு புள்ளி வருடா வருடம் அதிகரிக்கிறது. அதை அடைய முடியாதவர்கள் தோற்றவர்களா? 100க்குமேல் புள்ளி எடுத்தவர்கள் எல்லோரையும் வென்றவர்களாகவே கருத வேண்டும். அது மட்டுமல்ல சிலபிள்ளைகள் விசேட திறமைகள் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் இப்பரீட்சை அளவிடுவதில்லை. எனவே இதோடு அவர்களது எதிர்காலம் இருண்டு விடுவதில்லை. அவர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. எனவே பெற்றோர்களே நீங்களும் சேர்ந்து உங்கள் பிள்ளைகளின் மனத்தையும் சோர்வடைய வைத்து விடாதீர்கள்.

இதை எழுதும் போது எனது நண்பரின் மகள் அவளும் சோதனை எடுத்திருந்தாள் அவள் பாடிய ‘மழைமட்டுமா அழகு சுடும்வெயில்கூடத்தான் அழகு’ என்ற பாடல் வரிகள் தான் காதில் ஒலித்தபடி இருக்கிறது.

*

*

Top