கீதவாஹினி இசைக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

கீதவாஹினி இசைக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவும். வாணி விழா கலை நிகழ்ச்சிகளும் இன்று 18.10.2015. ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஸ்ரான்லி கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் நிறுவுநரும். தலைவருமான செல்வி. கிருஷ்ணவேணி மயில்வாகனம் அவர்களின் நெறியாள்கையில். கல்லூரியின் அதிபர்கள். பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழி நடத்தலில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பெருந்திரளான மாணவர் குழுக்களால் விமரிசையாக நிகழ்த்தப்பட்டன.

கலாநிதி தர்ஷனன் தனது பிரதம விருந்தினர் உரையில்…

‘இசைத் திறனை வளர்த்து இசைச்சேவை செய்வதோடு மட்டுமல்லாது, இசை ஊடாக நல்ல பண்புகளையும், திறன்களையும் மாணவர் மத்தியில் வளர்க்கும் நற்பண்பும், திறமையும் பொருந்தியவர் கிருஷ்ணவேணி மயில்வாகனம் அவர்கள். யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையில் 1999ம் ஆண்டிலிருந்து கடமையாற்றிக் கொண்டிருக்கும் நான், ஒவ்வொரு ஆண்டிலும், சில மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாகவும், பிற தேவையற்ற நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்பவர்களாகவும், எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவர்களாகவும் இருப்பதை அவதானித்து, அவர்களைப் பற்றி விசாரித்தபோதெல்லாம், தாம் கிருஷ்ணவேணி மயில்வாகனத்தின் மாணவர்கள் எனக் குறிப்பிடுவார்கள். தன்னைப் போலவே தன் மாணவர்களையும் உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாக உருவாக்கும் அவரின் உயர்ந்த உள்ளத்தினாலேயே, இக்கல்லூரி பெருவிருட்சமாக உயர்ந்து நிற்கின்றது, இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கும். உள்ளத்திலும் செயலிலும் தூய்மையும், நேர்மையும், இசையை வளர்க்க வேண்டுமென்ற உத்வேகமும் கொண்ட எவருக்கும் கடவுள் உயர்ச்சியையே தருவார். பதவிகள் பறிக்கப் பட்டாலும் அதைவிட உயர்ந்த பதவிகள் ஆண்டவனால் அளிக்கப்பட்டே தீரும்.’

விழாவின் தலைவராகக் கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவியும், யாழ்.பல்கலைக்கழக இசத்துறையின் முன்னாள் வயலின் விரிவுரையாளருமான இசை முதுமாணி பிறிசில்லா ஜோர்ஜ் ‘ வெளிநாடுகளில் கூட தமது கல்லூரிக்கு கிளைகள் உருவாகுவதற்கும், கல்லூரியின் 41 வருட, தொடர்ச்சியான இசை வரலாற்றுக்கும் அதன் தலைவரின் திறமையும், மாணவர் பெற்றோரின் ஒத்துழைப்பும்,  நலன்விரும்பிகளின் நன்கொடைகளுமே காரணம்’ என்றார்.

கீதவாஹினி இசைக்கல்லூரியின் பரிசளிப்பு விழா1

சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்த யாழ்.ஸ்ரான்லிக் கல்லூரியின் அதிபர் ஶ்ரீமதி.மகேஸ்வரன் அவர்களும், ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திருவாளர் குகதாசன் அவர்களும் கல்லூரியின் பெருமைகளையும், கல்லூரியை வாழ்த்தியும் பேசினார்கள். கல்லூரிக் கிளையின் அதிபர் பகீரதி சுப்ரமணியக்குருக்கள், தம் குரு கிருஷ்ணவேணி மயில்வாகனத்தையும், குருவின் குரு ராதாதேவி அவர்களையும் கௌரவித்துப் பேசினார்கள். சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ‘கீதசொரூபி’ பட்டத்தினையும், பதக்கத்தினையும் கல்லூரி நிர்வாகத்தினர் உவந்தளிக்க, கலாநிதி தர்ஷனன் – கலாநிதி ஆனந்தஜோதி தம்பதியர் அவர்களுக்கு அவற்றை வழங்கி கௌரவித்தனர்.

கீதவாஹினி இசைக் கல்லூரியின் பரிசளிப்பு விழா g1

கீதவாஹினி இசைக் கல்லூரியின் பரிசளிப்பு விழா g2

*

*

Top