வடமாகாண இலக்கிய விழா கிளிநொச்சியில் ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களம், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா இன்று 23.10.2015 வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  வட.மாகாண  கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநதன் ஆகியோா் கலந்து கொள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய அரசாங்க அதிபர், இவ்வாறான இலக்கிய விழாக்களின் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டார். தற்போது இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் முக்கியமளிப்பதாக  குறிப்பிட்ட அவா் கலைஞா்கள் தொடா்ந்தும் வறிய நிலையில் காணப்படும் சூழல் எமது நாட்டை போன்று மூன்றாம் உலக நாடுகளில் தொடா்ச்சியாக நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

நாளை 24.10.2015 சனிக்கிழமை  இரண்டாம் நாள் நிகழ்வுகள் பி.ப 1.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளதென்பதுடன், பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சல் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத் தக்கது. வடக்கு மாகாணத்தில் உள்ள கலைஞர்கள், பாடசாலைகளினதும் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன், “கௌரவ முதலமைச்சர் விருது” மற்றும் சிறந்த நூலிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வும்  இடம்பெறவுள்ளது.

*

*

Top