வடஇலங்கைச் சங்கீத சபையில் ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம்

சூரியயாழினி வீரசிங்கம் (நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி, வவுனியா) அணுசரனையில் வடஇலங்கைச் சங்கீத சபையின் ஏற்பாட்டில் மாதாந்த கலை நிகழ்ச்சி (2015) 31.10.2015 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு வடஇலங்கைச் சங்கீத சபையின் தற்பானந்தன் கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விலே முதல் நிகழ்வாக இசை அரங்கு நடைபெற்றது. இதில் செல்வன் கமலகாந்தன் குரலிசை வழங்க அணிசை கலைஞர்களாக வயலின் – ஜெயராமன், மிருதங்கம் – பரம்மஸ்ரீ N.சிவசுந்தரசா்மா, கடம் – K.ரவிசங்கா் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் பாட்டு – G.நக்கீரன், வயலின் – அ.ஜெயராமன், மிருதங்கம் – S.வேல்மாறன், கடம் – V.சிவமூா்த்தி, கெஞ்சிரா- K.நந்தகுமாா் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இரண்டாவது நிகழ்வாக இணுவில் கந்தசாமி கோவில் இளந்தொண்டர் சபை அறநெறி மாணவா்கள் வழங்கிய ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் நடைபெற்றது. நிகழ்விலே மாணாக்கர்கள், விரிவுரையாளர்கள், கலை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (1) ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (2)‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (4) ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (3)

‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (5) ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (6) ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (7) ‘ஞான வேல்’ புராண இதிகாச நாடகம் (8)

*

*

Top